1. வாழ்வும் நலமும்

அன்னாசிப்பழத்தை வளர்ப்பது எப்படி ? எளிதாக வளர்க்கும் முறை

Aruljothe Alagar
Aruljothe Alagar
Pineapple growth

அன்னாசிப்பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்ததும், இலைகளுக்கு கீழே அரை அங்குல (1.5 செ.மீ.)  அளவு இலைகளின் மேல் அறுக்கு கொள்ளுங்கள். பின்னர் அடிப்பகுதியில் இருக்கும் ஒரு சில இலைகளை அகற்றவும். அன்னாசி பழத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் பகுதியை எடுத்துவிடவேண்டும்.

இவை தண்டுகளின் சுற்றளவுக்குச் சுற்றியுள்ள சிறிய, பழுப்பு நிற புடைப்புகளை ஒத்திருக்க வேண்டும். நடவு செய்வதற்கு முன்னர் அன்னாசிப்பழத்தின் மேல் பகுதி முதல் ஒரு வாரம் வரை உலர விட வேண்டும். இதனால் அன்னாசியின் மேல் பகுதி அழுகாமல் இருப்பதற்கு உதவுகிறது.

அன்னாசிப்பழத்தை நடவு செய்வது

அன்னாசிப்பழத்தை தண்ணீரில் முளைக்க முடியும் என்றாலும், பெரும்பாலான மக்கள் அவற்றை மண்ணில் வேரூன்றச் செய்வது வளர்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. பெர்லைட் அதாவது தாவர வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்  மணல் மற்றும் ஒரு லேசான மண் கலவையைப் பயன்படுத்தலாம். அன்னாசிப்பழத்தின் மேற்புறத்தை சில  இலைகள் மட்டும் அடிப்பகுதி வரை மண்ணிற்குள் புதைப்படும் அளவிற்கு வைக்கவும். நன்கு தண்ணீர் விட்டு மறைமுகமாக வெயில் அளவில் இருக்கும் வெளிச்சத்தில் வைக்கவும்.

வேர்கள் உருவாகும் வரை அன்னாசி பழம் ஈரப்பதமாக இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். வேர்கள் வெளிவருவதற்கு கண்டிப்பாக இரண்டு மாதங்கள் (6-8 வாரங்கள்) ஆகும். வேர்கள் வளர்ந்திருக்கிறதா என்பதை உறுதி செய்ய மெதுவாக வெளியே இழுத்து சரிபார்த்துக்கொள்ளலாம். குறிப்பிடத்தக்க வேர் வளர்ச்சி ஏற்பட்டவுடன், நீங்கள் அன்னாசிக்கு வெளிபடையான வெளிச்சத்தை கொடுக்க ஆரம்பிக்கலாம்.

வளர்ந்து வரும் அன்னாசியை குறைந்தது ஆறு மணிநேர பிரகாசமான வெயிலில் வைக்க வேண்டும். அன்னாசிக்கு தேவையான அளவு தண்ணீர் விட வேண்டும், பின்னர் தண்ணீர் உலர்ந்து உரிஞ்சும் வரை அதனை அப்படியே விடுங்கள். அன்னாசி செடியை வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கரையக்கூடிய வீட்டு தாவர உரத்துடன் உரமாக்கலாம்.

விரும்பினால், அன்னாசி செடியை வெளியில் அரை நிழல் கொண்ட இடத்தில் வசந்தம் மற்றும் கோடை முழுவதும் வளர்க்கலாம். இருப்பினும், குளிர் காலத்திற்கு முன்னரே அதனை குளிரிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுங்கள்.

அன்னாசிப்பழங்கள் மெதுவாக வளரும் தாவரங்கள் என்பதால், குறைந்தது இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரை பூக்கள் பூக்கும் என்றும் எதிர்பார்க்க வேண்டாம். இருப்பினும், முதிர்ந்த அன்னாசி செடிகளை பூப்பதை ஊக்குவிக்க முடியும். நீர்ப்பாசனத்திற்கு இடையில் தாவரத்தை வைப்பது பூவைத் தூண்டும் எத்திலீன் உற்பத்தியை ஊக்குவிக்க உதவும் என்று கருதப்படுகிறது.

அன்னாசிப்பழத்தை ஒரு ஆப்பிளுடன் ஒரு பிளாஸ்டிக் பையில் பல நாட்கள் வைக்கலாம். ஆப்பிள்கள் எத்திலீன் வாயுவைக் கொடுப்பதில் சிறந்தவை. அன்னாசிப்பழத்தை எவ்வாறு வளர்ப்பது என்பதைக் கற்றுக்கொள்வது, ஆண்டு முழுவதும் இந்த தாவரங்களின் சுவாரஸ்யமான, பசுமையாக விசயங்களை அனுபவிக்க எளிதான வழியாகும்.

மேலும் படிக்க:

சந்தைப் போட்டி இல்லாத சாத்துக்குடி சாகுபடி! விவசாயிகள் ஆர்வம்!

தென்னையில் எவற்றை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம்?

தென்னையை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகள்! - கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கம்!!

English Summary: How to Grow Pineapples from Tops Rooting and growing pineapple tops is easy Published on: 09 July 2021, 01:43 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.