ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிக்க ஒரு நல்ல இரவு தூக்கம் மிகவும் முக்கியமானது. இருப்பினும், பலர் போதுமான தரமான தூக்கத்தைப் பெறுவதில் சிரமப்படுகிறார்கள்.
நல்ல தூக்கம் சிறந்த உடல் ஆரோக்கிய நலத்துடன் தொடர்புடையது. இது உடல் பருமன், நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். நல்ல தூக்கம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது, உடல் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. தூக்கமின்மையால் அவதிப்படும் நபர்களில் நீங்களும் ஒருவரா? உங்கள் தூக்கப் பழக்கத்தை மேம்படுத்த நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களை இங்கு காணலாம்.
வழக்கமான உறங்கும் நேரத்தை உருவாக்குங்கள்:
ஒரு நிலையான உறக்க நேர வழக்கத்தை நிறுவுவது நமது அன்றாட வாழ்வில் அவசியம். இது ஓய்வெடுக்கும் நேரம் மற்றும் உறக்கத்திற்குத் தயாராகும் நேரம் என்பதை உங்கள் உடலுக்கு அட்டவணைப்படுத்தி கொடுங்கள். சூடான குளியல், புத்தகம் படிப்பது அல்லது ஆழ்ந்த சுவாச, தியானம் போன்ற பயிற்சி செய்வது போன்ற விஷயங்கள் இதற்கு உதவும்.
ஒரு வசதியான தூக்க சூழலை உருவாக்குங்கள்:
ஒரு வசதியான தூக்க சூழலை உருவாக்குவது உங்களுக்கு நன்றாக தூங்க உதவும். உங்கள் அறை குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், அமைதியாகவும் இருப்பதை உறுதிசெய்து, உங்களின் உடல் வசதிகேற்ப மெத்தை மற்றும் தலையணையினை பயன்படுத்துங்கள்.
மொபைல், கணினி பயன்பாட்டினை தவிருங்கள்:
இன்று நம்மில் பலருக்கு தூங்குவதற்கு முன்பும், தூங்கி எழுந்ததும் பார்ப்பது முதலில் மொபைல் போன்களை தான். மொபைல், கணினி போன்ற திரைகள் மூலம் வெளிப்படும் நீல ஒளி உடலின் இயற்கையான தூக்கம்-விழிப்பு சுழற்சியை சீர்குலைத்து, தூங்குவதை கடினமாக்குகிறது. படுக்கைக்கு முன் குறைந்தது ஒரு மணிநேரம் இவற்றினை பயன்படுத்துவதை தவிருங்கள்.
காஃபின் மற்றும் ஆல்கஹால் தவிர்க்கவும்:
காஃபின் மற்றும் ஆல்கஹால் இரண்டும் தூக்கத்தினை இடையூறு செய்யக்கூடியவை. மதியம் அல்லது மாலையில் காஃபின் உட்கொள்வதைத் தவிர்க்கவும், குறிப்பாக உறங்கும் முன் மது அருந்துவதை குறைத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்:
வழக்கமான உடற்பயிற்சி தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும். இருப்பினும், படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பது முக்கியம். ஏனெனில் இது தூங்குவதை கடினமாக்கும்.
மன அழுத்தத்தை நிர்வகித்தல்:
மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை நன்றாக தூங்குவதை கடினமாக்கும். தியானம் அல்லது யோகா போன்ற பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க முயற்சிக்கவும் அல்லது தேவைப்பட்டால் மருத்துவரிடம் உங்களது பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்கலாம்.
நல்ல தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, உகந்த ஆரோக்கிய விளைவுகளை ஆதரிக்க முடியும் என்பதை நினைவில் கொள்க.
pic courtesy:@ilovetrichy -fb
மேலும் காண்க:
Share your comments