1. வாழ்வும் நலமும்

Lockdown : வீட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

கொரோனா தொற்று காரணமாக தற்போது நிலமை தலைகீழாக மாறியிருக்கிறது. அனேக ஐ.டி நிறுவனங்கள் (IT sectors) தங்களின் உழியர்களை வீட்டில் இருந்தே வேலை (Work From Home) செய்ய அறிவுறுத்தி வருகிறது. இது மட்டும் இன்றி பலர் வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமால் தவித்து வருகின்றனர்.

இதில் அதிகம் பேசப்படும் பொருளாக மாறியிருக்கிறது உடல் பருமன் (Obesity). அன்றாட செயல்பாடுகளின் குறைவு காரணமாக நம்மில் பலருக்கு இந்த காலக்கட்டத்தில் உடல் பருமன் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது, இத்தகைய சூழலில் வீட்டில் இருந்த படியே சில எழிய முறைகளை பின்பற்றி நாம் நம் உடல் எடையினை பராமரித்துக் கொள்ள முடியும்.
உங்களின் நேரத்தை கொஞ்சம் உங்களின் ஆரோக்கியம் மீது செலுத்தினால் நிச்சயம் உடல் பருமன் என்ற மன பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.

பின் வரும் சில குறிப்புகளை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் நிச்சயம் உங்களால் உங்கள் எடையை குறைக்க முடியும்.

நடைபயிற்சி

ஆரோக்கிய வாழ்க்கைக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்று. இந்த உடற்பயிற்சியை நீங்கள் ஜிம்மிற்கு (Gym) சென்றுதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. நடப்பது கூட ஒரு உடற்பயிற்சி தான். தினமும் நடைபயிற்சிக்கு உங்கள் நேரத்தை செலவிடுங்கள். நடைபயிற்சி செய்வதன் மூலம் உங்களால் உங்களின் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் எத்தனை நேரம் நடைபயிற்சிக்கு உங்கள் நேரத்தை செலவு செய்கீறீர்களோ அத்தனை அதிகமாய் உங்கள் எடையை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

வெண்ணீர் பருகுதல்

நம்மால் எளிய முறையில் பின்பற்ற முடிந்த விஷயங்களில் இதுவும் ஒன்று. உங்கள் காலை, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்குப் பிறகு 1 அல்லது 2 கப் சூடான தண்ணீர் குடிப்பது நல்லது. நீங்கள் சூடான நீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடலில் செரிமான சக்தி அதிகரிக்கிறது மேலும் உங்கள் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை கரைக்கவும் இது உதவும். இது சீனா, இந்தியா, ஜப்பான், இலங்கை மற்றும் போன்ற ஆசிய நாடுகளில் பின்பற்றப்படும் எளிய முறை எடை இழப்பு நுட்பமாகும்.

உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்

அவசர அவசரமாக சாப்பிடும் போது, உணவை மென்று சாப்பிடாமல் பலர் அப்படியே விழுங்குவது வழக்கம். இது உடலில் கொழுப்பு உருவாவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நாம் சாப்பிடும் உணவு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் நம் செரிமான அமைப்பு அதை எளிதாக ஜீரணிக்கும். ஆனால் இந்த மிகவும் பிஸியான உலகில், நாம் உட்கார்ந்து சாப்பிட கூட நேரம் இல்லை. பிறகு நாம் எப்படி நன்றாக மெல்ல முடியும். ஆனால் நீங்கள் எடை குறைக்க விரும்பினால், குறைந்தபட்சம் 24 முறை உணவுவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அல்லது 30 முதல் 35 நிமிடம் நன்றாக மென்று சாப்பிடவும்.

முழு பழம் & காய்கறி உணவு

மாதத்தில் ஒரு வாரத்திற்காவது ஒரு முழுமையான பழங்கள் மற்றும் காய்கறி உணவுகளை எடுத்துக்கொள்ளவும். இந்த 7 நாட்களில், பழங்கள் மற்றும் காய்கறிகள் தவிர வேறு எந்த உணவு வகைகளையும் சாப்பிட வேண்டாம். இந்த எளிய முறையை நீங்கள் பின்பற்றினால், உங்கள் வீட்டிலேயே நீங்கள் எடை குறைக்கலாம். இந்த 7 நாட்களுக்கு கேரட், ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, பைன் ஆப்பிள் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற பழவகைகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஆனால் இந்த 7நாட்களில் கனமான வேலைகளை செய்வதை தவிர்க்கவும். உணவுத் திட்டத்தில் திடீரென மாற்றம் ஏற்படுவதால், உங்கள் ஆற்றல் பல மடங்கு குறையும் மற்றும் சில உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வாய்ப்புகள் இருக்கும். 

இசைக்கு நடனமாடுங்கள்

உங்களுக்கு பிடித்த இசைக்கு ஒவ்வொரு நாளும் 15 அல்லது 20 நிமிடங்கள் நடனமாடுங்கள். தனியாக நடனமாடலாம் அல்லது உங்கள் நண்பர்களுடன் நீங்கள் நடனமாடலாம். இந்த எளிய வழிகளால், நீங்கள் அதிக கலோரிகள் (Calories) எரிக்க முடியும் மற்றும் உங்கள் வயிற்றை சுற்றி உள்ள கூடுதல் கொழுப்பு குறையும் . கூடுதலாக நீங்கள் நன்றாக நடனம் ஆடக்கூட கற்றுக்கொள்ளலாம்.

அம்லா சாறு பருகுதல்

எடை இழப்புக்கான சிறந்த பானங்களில் அமலா சாறும் ஒன்றாகும்.இந்த பானம் செரிமான பிரச்சனைகளை சரி செய்வதுடன் அதிக கொழுப்புக்ளை எளிதில் கரைக்க உதவுகிறது, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் சில ஆம்லா பழங்களை எடுத்து சாறு வடித்து எடுத்து தினமும் சூடான நீரில் சேர்த்து குடிக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு விரைவில் நல்ல பலன் கிடைக்கும்

மன அழுத்தத்தை குறைத்தல்

மன அழுத்தம் இருக்கும் போது உடல் எடையும் அதிகரிக்கும். எனவே மன அழுத்தத்தை குறைக்க வேண்டியது மிகவும் அவசியம். தியானம், இயற்கையோடு அதிக நேரம் செலவு செய்வது, பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துதல், ஆன்மிக இடங்களுக்கு செல்வது என எது வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் அமைதியாகவும் சமாதானமாகவும் இருங்கள்.

8 மணிநேரம் தூங்குங்கள்

தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையம் (NCBI) நடத்திய ஆய்வு ஒன்றின்படி, குறைவான நேரம் தூங்குபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் என தெரிவிக்கிறது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் பல்வேறு ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. எனவே குறைந்தபட்சம் 8 மணி நேரமாவது ஒருவர் தூங்க வேண்டும். இரவு 9 மணிக்கு தூங்கிக் கொண்டு காலை 5 மணிக்கு எழுந்திருங்கள் விழிப்புடன் செயல்படலாம்.

மேலும் படிக்க...

கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்!

உங்கள் ஆயுளை நீட்டிக்க இதை சாப்பிடுங்கள் போதும்!

கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!

English Summary: how to lose belly fat during lockdown Published on: 10 June 2020, 06:46 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.