1. வாழ்வும் நலமும்

வினை தீர்க்கும் தினை,சுவையான தினை பொங்கல் செய்வது எப்படி?

KJ Staff
KJ Staff
thinai pongal with added ghee

மற்ற சிறுதானியங்களை காட்டிலும் தினை தமிழ் இலக்கியத்தில் முதன்மையாக இடம்பெற்றுள்ளது. இதை பற்றிய குறிப்புகளை  நாம் ஐங்குறுநானூறு போன்ற நூல்கள்  மூலம் அறிந்து கொள்ளலாம். இத்தினையை பயன்படுத்தி பொங்கல் எப்படி செய்வது என்று  பின்வருமாறு காண்போம் .

தினை பொங்கல்:

தேவையான பொருட்கள் :

  • 1 கப் தினை
  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • கறிவேப்பில்லை
  • பச்சைமிளகாய் 3
  • முந்திரி -10
  • பெருங்காயத்தூள்
  • துருவிய இஞ்சி சிறிதளவு
  • சீரகம்
  • மிளகு
  • நெய்
  • உப்பு
  • தண்ணீர்

செய்முறை:

ஒரு கப் தினை மற்றும் அரை கப் பாசிப்பருப்பு இரண்டையும் தண்ணீரில் நன்கு அலசி 1 மணிநேரம் ஊறவைக்கவும்  பின்னர் அதை ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து  4 கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

செய்முறை:

ஒரு கப் தினை மற்றும் அரை கப் பாசிப்பருப்பு இரண்டையும் தண்ணீரில் நன்கு அலசி 1 மணிநேரம் ஊறவைக்கவும்  பின்னர் அதை ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து  4 கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் .

பின்னர் ஒரு கடாயில் நெய் சேர்த்து சீரகம், மிளகு, கறிவேப்பில்லை, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, முந்திரி, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பொரிந்தவுடனுன், அதில் வேகவைத்த தினையயும் பருப்பையும் சேர்த்து நன்கு கிளறி விடவும், சுவையான தினைப்  பொங்கல் தயார் .நெய் சேர்க்க சேர்க்க சுவை மிகவும் அதிகரிக்கும் தேவையான அளவை சேர்த்துக்கொள்ளவும். இப்பொங்கலை தேங்காய் சட்னியுடன் பறிமாறலாம்.

மற்ற சிறுதானியங்களைப் போலவே தினையும் ஊட்டச்சத்தின் ஆற்றல் மையமாகும். வைட்டமின் பி 12 நிறைந்த இந்த சிறிய விதைகள் உங்களுக்கு தினசரி போதுமான அளவு புரதம், நல்ல கொழுப்பு, மாவுச்சத்து மற்றும் அற்புதமான உணவு நார்ச்சத்து ஆகியவற்றை வழங்க முடியும். லைசின், தயாமின், இரும்பு மற்றும் நியாசின் ஆகியவற்றின் ஏராளமான அளவுகளைத் தவிர, இது ஏராளமான கால்சியத்தையும் வழங்குகிறது. ஆகையால் தினையை உங்கள் தினசரி உணவில் முடிந்தவரை இனைத்து பயன்பெறவும்.

மேலும் படிக்க:

Breakfast Recipe: அசத்தலான இன்ஸ்டன்ட் ராகி தோசை

மண்மணத்துடன் பாரம்பரியமான செட்டிநாடு கோழி குழம்பு

English Summary: How to make a delicious millet Pongal that solves many problem? Published on: 04 January 2023, 04:30 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.