1. வாழ்வும் நலமும்

பலாப்பழத்தில் பாயாசம் செய்முறை மற்றும் அதன் அம்சம்!

Dinesh Kumar
Dinesh Kumar
Jackfruit Payasam.....

பலாப்பழம் பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடும் பலமாகும். இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. பழுத்த மற்றும் பழுக்காத பழங்கள் இரண்டும் உட்கொள்ளப்படுகின்றன. பலாப்பழம் பங்களாதேஷ் மற்றும் இலங்கையின் தேசிய பழமாகும், மேலும் இந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில பழமாகும். 

நூடுல்ஸ் மற்றும் சிப்ஸ் போன்ற பழங்களில் இருந்து பெறப்பட்ட பல்வேறு தயாரிப்புகளாக, இது சர்வதேச அளவில் பதிவு செய்யப்பட்ட அல்லது உறைந்த மற்றும் குளிர்ந்த உணவுகளில் கிடைக்கிறது.

பலாப்பழத்தின் முக்கியத்துவம்:

பலாப்பழம் வைட்டமின் சி, பொட்டாசியம், உணவு நார்ச்சத்து மற்றும் பிற முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும். மேலும், சதை, விதைகள் மற்றும் தாவரத்தின் பிற பகுதிகளில் உள்ள கலவைகள் பல சுகாதார நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க அல்லது தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது. பலாப்பழம் ஒரு பிரபலமான இறைச்சி மாற்றாகும்.

ஒரு விருந்தில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவது பாயாசம்தான். சர்க்கரை நோயாளிகள்கூட கொஞ்சம் பாயாசத்தை ருசித்துப் பார்க்கவே விரும்புவார்கள். தமிழகத்தில் விருந்தில் தவறாது இடம் பெறும் பாயாசத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவார்கள்.

அத்தகைய பாயாசத்தை பலாப்பழம் கொண்டு செய்தால் எப்படி இருக்கும்?

தேவையான பொருட்கள்:

பலாப்பழம் - 20
தேங்காய் பால் - 2 கப்
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 6 (பொடி)
முந்திரி - தேவையான அளவு
பிஸ்தா - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு

செய்முறை:

1. முதலில் பலாப்பழத்தில் இருந்து கொட்டைகளை நீக்கி விட்டு தனியாக வைக்கவும். ஒரு பலாப்பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பலாப்பழத்தை வேக வைத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு நன்றாக கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பிஸ்தாவை வறுத்து எடுத்து கொள்ளவும்.

3. பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மசித்து வைத்த பலாப்பழ விழுதை போட்டு அதன்பின் ஏலத்தூள், தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி கொதிக்க விடவும்.

4. பின்னர் முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கி, நெய்யில் வறுத்து பலாப்பழத்தில் சேர்த்து, மீண்டும் இறுதியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான இனிப்பான பலாப்பழம் பாயாசம் ரெடி, ரூசித்து மகழ்ந்திடுங்கள்.

மேலும் படிக்க:

நீரிழிவு பிரச்சனை உள்ளவரா நீங்கள்: அவசியம் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

கேரள மாநிலத்தின் பலாப்பழ மேம்பாடு மற்றும் செயலாக்கம், பலாப்பழம் விதைகளை விற்பனை செய்வதற்கான வணிக சாத்தியங்கள்

English Summary: How to make jackfruit Kheer? Published on: 13 May 2022, 02:38 IST

Like this article?

Hey! I am Dinesh Kumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.