1. வாழ்வும் நலமும்

Idly Chutney: சூடான இட்லிக்கு ஏத்த எள்ளு சட்னி! செய்முறை இதோ!!

Poonguzhali R
Poonguzhali R

Idly Chutney: Sesame chutney for hot idly! Here is the recipe!!

இட்லி,தோசை போன்றவற்றிக்கு பூண்டு சட்னி,கார சட்னி,தேங்காய் சட்னி,சாம்பார் என்று செய்து அலுத்து விட்டதா உங்களுக்கு? கொஞ்சம் மாற்றி, சுவையாக, புதுமையாக ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அப்போ இந்த சட்னியை செய்யலாம்.

தேவையான பொருட்கள்
எள்ளு - 1/4 கப்
பூண்டு - 4 பற்கள்
தேங்காய் - 1/2 கப்
இஞ்சி - 1 துண்டு
உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
வரமிளகாய் - 7
புளி - 1 லெமன் சைஸ்
கடுகு-1 /2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

செய்முறை வருமாறு:

  • தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • இஞ்சி மற்றும் பூண்டு பற்களை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய வைத்தல் வேண்டும்.
  • எண்ணெய் சூடான பிறகு, எள்ளு விதைகளை சேர்த்து தீயினை சிம்மில் வைத்து வதக்கி விடுதல் வேண்டும்.
  • எள் வதங்கி நன்றாக வாசனை வந்த பிறகு, அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விடுதல் வேண்டும்.
  • இஞ்சி பூண்டின் பச்சை வாசனை சென்ற பின்பு,புளி சேர்த்து வதக்கி விட வேண்டும்.
  • அதன்பிறகு வரமிளகாய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி கடாயை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு குளிர செய்யதல் வேண்டும்.
  • கடாயில் இருக்கும் கலவை நன்றாக ஆறிய பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • அடுப்பில் ஒரு சிறிய பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுதல் வேண்டும்.

சூடான சுவையான எள்ளுச்சட்னியை நீங்களும் செய்து பாருங்கள்.

மேலும் படிக்க

சிறுநீரகக் கற்களை கரைக்க இயற்கையான ஐந்து எளிய வழிகள்! 

Ration Card: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணேய்! புதிய தகவல்!!

English Summary: Idly Chutney: Sesame chutney for hot idly! Here is the recipe!!

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.