உலகளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, உலகளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 50 விழுக்காடுக்கும் மேலான சர்க்கரை நோயாளிகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இன்சுலின் பற்றாக்குறையால் ஏற்படும் நீரிழிவு நோய் மற்ற நோய்களையும் ஏற்படுத்தும் காரணியாக இருப்பதாகட்டும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் பிற நோய்களால் பாதிக்கப்படுவதாகட்டும் அதிகமாகவே காணப்படுகிறது.
கொரோனா காலத்திலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களே அதிகமாக இறக்க நேர்ந்தது. இதனை தடுக்க முறையான வழிமுறைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடதக்கது. பாரம்பரியம் அல்லது வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணங்களால், ஒருவருக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது, இதனால் நாம் பல பாதிப்புகளை சந்தித்து வருகின்றோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை நோய் தங்களுக்கு இருப்பதே பலர் தாமதமாக அறிந்து கொள்வதாகும். இதுவே அவர்களின் பல்வேறு உடல்நல சிக்கலால் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. பின்பு இதை எவ்வாறு அறிந்துக்கொள்வது போன்ற சந்தேகங்கள் வரலாம், அதற்கான இரண்டு வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சர்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் புண்களாகட்டும் அல்லது வெட்டு காயங்களாகட்டும் அல்லது வெறு உடல் பிரச்சனைகளாகட்டும், எளிதில் தீர்வு காண முடியாது.
சில அறிகுறிகளால், உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதை நீங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அந்த அறிகுறிகள் தென்படத் தொடங்கும்போதே மருத்துவமனைக்கு சென்று சர்க்கரை பரிசோதனை செய்து, உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் சரியான நேரத்தில், நீரிழிவு நோயை கண்டுபிடித்து, சரியான வாழ்க்கை முறையில் பயணிக்கவும் உதவியாக இருக்கும்.
சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீர் அதிகமாக வரும், சோர்வு ஏற்படும், தலைச்சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகளும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஆனால், வாய் பகுதியில் ஏற்படும் அசாதாரண புண்கள், துர்நாற்றம் ஆகியவையும் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளாகும். உங்கள் வாயில் அசாதாரணமாக துர்நாற்றம் வீசினால், உடனே பரிசோதனை செய்வது அவசியம். சரியான நேரத்தில் சர்க்கரை நோயை கண்டறியாத ஒருவருக்கு இதய நோய், பக்கவாதம், சிறுநீரக கோளாறுகள், நரம்பியல் நோய்கள் உள்ளிடவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
எனவே, சரியான நேரத்தில் பரிசோதித்து, மருத்துவரின் வழிகாட்டுதலுக்கு கீழ், உணவு பழக்கம் மற்றும் பிற பயிர்ச்சிகளை மேர்கொண்டால் பயனடையலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க:
பட்ஜெட் 2022: வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்காக, புதிய அலோவன்ஸ், வழங்க வாய்ப்பு!
ஜனவரி 30 வரையிலான வானிலை அறிக்கை! கீழடுக்கு சுழற்சியே காரணம்!
Share your comments