தமிழகத்தில் பல இடங்களில் வெயில் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டியிருக்கிறது. வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலரது உடலில் சுட்டு, சுடு பிடி போன்ற பிரச்சனைகள் வர தொடங்கியுள்ளது. எனவே, உடல் உஷ்ணத்தை குறைக்கவல்ல, மற்றொரு பழத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் உஷ்ணத்தை போக்க கூடியதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கவல்லதும், வயிற்றுப்போக்கை குணப்படுத்த கூடியதுமான முலாம்பழம் நல்ல மணம், சுவை உடையதாகும். இந்தப் பழம் மிகுந்த சத்துக்களை உள்ளடக்கியது. இதில் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, பொட்டாசியம் சத்து மற்றும் மினரல் அதிகம் இருப்பது குறிப்பிடதக்கது.
முலாம் பழத்தை எவ்வாறெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்(Ways to take melon fruit):
இந்தப் பழம், நோய்களை தடுக்க கூடியது மட்டுமின்றி உடலுக்கு புத்துணர்வை அளிக்கவும் வல்லதாகும். கோடைக் காலத்தில் முலாம் பழம் அதிகளவில் கிடைக்கும் பழங்களில் ஒன்றாகும். மேலும், இந்தப் பழத்தைக் கொண்டு நீர்வேட்கையை தணிக்கும் பானம் தயாரிக்கலாம். முலாம் பழத்தின் சதை பகுதியை அரைத்து பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடிக்கலாம்.
இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். முலாம் பழத்தை பயன்படுத்தி மில்க் ஷேக்-கும் தயாரிக்கலாம். விதைகள் நீக்கிய முலாம் பழத்துடன், சிறிது பனங்கற்கண்டு, காய்ச்சிய பால் சேர்த்து அரைத்து சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து அருந்திக்கொள்ளலாம். இந்த மில்க் ஷேக்கை காலை உணவின்போது எடுத்துக்கொண்டால் அதிக பலன் பெறலாம்.
மலிவாக கிடைக்க கூடிய முலாம் பழத்தை பயன்படுத்தி உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்றுப்போக்கை குணப்படுத்த பானம் தயாரிக்கலாம். விதைகள் நீக்கிய முலாம் பழத்துடன், கால் ஸ்பூன் சீரகப் பொடி, 2 சிட்டிகை சுக்குப் பொடி, சிறிது பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை சாப்பிட்டுவர வயிற்று வலி, வயிற்றுபோக்கு கண்டிப்பாக குணமடையும். வெயிலால் ஏற்படும் நோய்களை குணமாக்கும். சீத பேதி, கழிச்சலுக்கு, இந்தப் பழம் மருந்தாகிறது.
இதன் பலன்கள் என்னென்ன? (What are the benefits?):
இது, வெயில் காலத்தில் ஏற்படும் சோர்வை குறைக்கிறது. சிறுநீர் எரிச்சலை தடுக்கின்றது. மிகுந்த சத்தூட்டமான உணவாக, இது அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கர்ப்பிணி பெண்கள், இதை எடுத்துக்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும், மேலும், இது குழந்தையின் முதுகெலும்பு, மூளை வளர்ச்சி நன்றாக இருக்கச் செய்யும் என்பது குறிப்பிடதக்கது.
சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் பானம் தயாரிக்கலாம். முலாம் பழத்தின் சதை மற்றும் விதையுடன் சீரகப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடிப்பதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன் உற்சாகத்தை கொடுக்கிறது. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் இது சிறுநீர் எரிச்சலை தடுக்கிறது.
முலாம் பழம் உள் உறுப்புகளின் உஷ்ணத்தை குறைக்கும். வெளிப்பூச்சாக பயன்படுத்துவதன் மூலம் தோல்நோய்கள் கூட குணமாகும். முலாம் பழத்தின் விதை சிறுநீர் எரிச்சலை போக்க வல்லது. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும். முலாம் பழம் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான பழமாகும். இந்தப் பழம், கோடைகாலத்துக்கு ஏற்ற உணவாகவும் விளங்குகிறது.
- இப்பழத்தில் புரதச்சத்து, கார்போஹைட்டிரேட், சுண்ணாம்பு சத்து, மக்னீசியம், இரும்புசத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் "ஏ', "பி', "சி', ஆக்சாலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.
- கனிந்த பழத்தின் சதைப் பகுதியை அப்படியே சாப்பிடலாம். இத்துடன் தேன், சர்க்கரை கலந்தும் உண்ணலாம், அதிலும் தேன் கலந்து சாப்பிடுவது, சிறப்பாகும். இதனை, ஜூஸ் ஆகவும், பாலுடன் கலந்து "மில்க் சேக்'காகவும் அருகலாம்.
- முலாம் பழத்தை உண்டு வர, மூல நோய் வரை குணமாகும். இதனால், மலச்சிக்கலும் நீங்குகிறது. சிறுநீர்தாரை எரிச்சல், நீர்க்கடுப்பும் நீங்குகிறது.
- இது, அஜீரணத்தை அகற்றி பசி ருசியை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடதக்கது.
- இதில் வைட்டமின்கள் “ஏ”, “பி”, “சி” தாதுப் பொருள்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் என்பது குறிப்பிடதக்கது. கல்லீரல் கோளாறுகளைப் போக்கும் தன்மையும் இதற்கு உண்டு.
- பித்தத்தை மொத்தமாக அகற்றும் மற்றும் சரும நோய்க்கு எளிய இயற்கை மருந்தாகும்.
- இப்பழச் சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப் புண் போன்ற பிரச்சனைகளும் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
- இப் பழம் உடலுக்கு வலுவைத் தரும், இப் பழத்தின் சதையைப் பயன்படுத்தி சர்பத் செய்து குடித்து வர உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும்.
- கோடை நோய்கள் வராமல் காக்க வல்லது.
கோடை நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா, முலாம் பழத்தை உண்டு பயனடையுங்கள்.
மேலும் படிக்க:
குடற்புழு தாக்குதலில் இருந்து மாடுகளைக் காக்க இயற்கை மருந்து!
தவறு செய்து வைரலாகும் மாணவர்கள் மத்தியில், உன்னத பணியாற்றிய மாணவர்கள்!
Share your comments