அனுதினமும் காலையில் நம்மைப் புத்துணர்ச்சி அடையச்செய்யும் நறுமணம் நிறைந்த பானம் என்றால் அது தேநீர் என அழைக்கப்படும் டீதான். இதற்கு அதன் மனமும், சுவையுமே சாட்சி. அவ்வாறு கடைகளில் நாம் ஆசை ஆசையாக ருசித்து, ரசித்துச் சுவைக்கும் தேநீர் தரமானதா என்றால், 100% தரமானது எனக் கூறமுடியாது. அப்படியானால் அதன் தரத்தை எப்படிச் சோதித்து அறிவது? அதற்கும் வழி இல்லாமல் இல்லை.
டீ தயாரிப்புக்கு, தேயிலையிலிருந்து பெறப்பட்ட டீத்தூள் பயன்படுத்தப்படுகிறது. டீ நல்ல நிறத்திலும், வாசனையுடனும் இருந்தால் மட்டுமே தரமிக்க டீத்தூள் என பலரும் நம்புகின்றனர். இதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு சிலர், டீத்தூளில் நிறமிகள் மூலம் செயற்கையாக நிறம் ஏற்றுவது மற்றும் ரசாயனங்கள் மூலம் வாசனை சேர்ப்பது உள்ளிட்ட மோசடிகளை செய்கின்றனர். இவ்வாறு செயற்கையாக நிறமி, வாசனை சேர்ப்பதால், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. டீக்கடைகள் அனைத்தும் தரமிக்க டீத்தூள் மற்றும் உணவுப்பொருட்கள் கொண்டு விற்பனை செய்யப்பட வேண்டும்.
கலப்படத்தை கண்டறிவது எப்படி?
-
பாலில் கலக்கும்போது, நிறம் அதிகமாக கிடைக்க டீத்தூளில் ரசாயன நிறமிகள் அதிகம் கலக்கப்படுகின்றன.தரமான டீத்தூள் மெதுவாக தண்ணீரில் கீழிறங்கும். மரத்தூள் போன்ற பொருட்கள் கலந்திருந்தால், தண்ணீரில் தனியாக மிதக்கும்.
-
தரமான டீத்தூளை சுடு தண்ணீரில் போட்டால் மட்டுமே தண்ணீரின் நிறம் மாறும்.
-
கலப்பட டீத்தூளை சாதாரண நீரில் போட்டாலே தண்ணீரின் நிறம் மாறும். சாதாரண நீரில் கலப்பட டீத்தூளை போடும்போது நீரின் மட்டத்தில் டம்ளரில் வளையம் ஏற்படும்.இதன்மூலம் கலப்பட டீத்தூளை அடையாளம் காணலாம்.
-
தரம் குறைந்த டீத்தூளில் செயற்கை வண்ணம் பூசப்பட்டால், அதனை வெந்நீரில் கலந்தவுடன் கெட்டியான நிறத்தை வெளியிடும்.இது நல்ல தரம் வாய்ந்தது என்ற தோற்றத்தை அளிக்கும்."
-
சாதாரண ஃபில்டர் பேப்பரில் டீத்தூளைக் கொட்டி நான்கு துளி நீர்விட்டால், பேப்பரில் சிவப்பு நிறம் தனியாகப் பிரிவது தெரிந்தால் அது தரமான டீத்தூள் என அறியலாம்.
-
இவ்வாறாகக் கலப்படப் பொருள்களை தொடர்ந்து உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடல் உறுப்புகள் செயலிழக்கும் நிலைக்குக்கூட ஆளாகலாம்.
-
இந்த கலர் கலப்படத்துடன் கூடிய கலப்படத் தேயிலையில் உருவான தேநீரை ஒருவர் சாப்பிட்டால் அல்சர் மற்றும் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் கூட இருக்கிறது.
எனவே பொதுமக்கள் தைரியமாக செயல்பட்டு இந்தமாதிரியான குற்றச் செயல்களைத் தட்டிக் கேட்கலாம். கடை உரிமையாளரிடம் தைரியமாக கேள்வி எழுப்பலாம். புகார் கொடுக்கும்பட்சத்தில் இத்தகைய தவறுகள் தொடர்ந்து நடக்கும் அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டு அவர்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று மற்ற இடங்களில் நடந்தாலும் பொதுமக்கள் 94448 11717, 94440 42322 என்ற எண்களுக்கு தகவல் அளிக்கலாம். பொருட்களை வாங்கும்போது பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தகவல்
பி.சதீஷ்குமார்,உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி, சென்னை.
மேலும் படிக்க...
இனி இவர்களுக்கு சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்- விபரம் உள்ளே!
ரத்தத்தில் சர்க்கரைக் கட்டுப்படுப்படுத்தும் வெண்டைக்காய் வாட்டர்!
Share your comments