இலந்தைப் பழம் பெயரை கேட்டதுபோல் உள்ளதா? ஆம் இலந்தப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகையான பழங்கள், இன்றளவும் கிரமங்களில் மட்டுமே ஒலிக்கின்றன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு. இப் பழங்கள் வகை சேடிகள் வளர , அதிக கவனம் தேவையில்லை, உரமும் தேவையில்லை. சிறிதளவு மழை போழிந்தால் போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இதனை சிறிய பேரிச்சை, காய்ந்த பழ வத்தல் என்றும் சொல்வர். புளிப்புச் சுவை கூடிய இப் பழம், அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படும், மேலும் இந்தியாவில் தெரு ஓரங்களில் இலந்தைப் பழம் விற்பதைக் காணலாம். இந்த இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் பற்றியும் வாருங்கள் பார்ப்போம்.
இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும், இப்பழத்தில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.
சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே. மேலும் இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.
உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டதாகும். குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை எடுத்துக்கொள்வது நல்லது. 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் 74% கலோரி, 17 %மாவுப் பொருள், 0.8 %புரதம் மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம். இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும்.
இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இது இரத்ததை சுத்திகரிக்கும், மேலும் முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள். தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.
மேலும் படிக்க:
Share your comments