அண்மைகாலமாக அதிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு நம்மில் பலருக்கும் உருவாகியுள்ள பிரச்னை தொப்பை. கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்ததன் பயன்தான் இந்தத் தொப்பை. அதனால், தொப்பை பிரச்சனை பலருக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் வெகுவாக குறைந்து விட்டதால், வயிற்றை சுற்றி அதிக கொழுப்பு சேருகிறது.
ஆனால் சில பானங்களைத் தவறாது எடுத்துக் கொள்வதன் மூலம், வயிற்றித் தொற்றியுள்ளத் தொப்பையையும், கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கும் எடையையும் குறைக்க முடியும்.
கருப்புக் காஃபி
காஃபி பொதுவாக ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுவதில்லை, ஏனெனில் அதில் உள்ள காஃபின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆனால் கருப்பு காஃபி அதாவது பிளாக் காஃபி குடித்தால், அது எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். காலையில் சர்க்கரை இல்லாமல் கருப்பு காபி குடிப்பதால் கொழுப்பு எரிகிறது, இருப்பினும் அதை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
மோர்
மோர் ஒரு சிறந்த எடை இழப்பு பானமாக கருதப்படுகிறது. இதை ஒரு நாளைக்கு சுமார் 3 முறை குடிக்கலாம். இது உடல் சூட்டை குறைக்கிறது. செரிமானத்தை சரியாக்கி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதைத் தவிர, உடல் கொழுப்பை தகர்க்க உதவுகிறது.
துளசி டீ
துளசி இலைகளின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். எனினும் இவற்றின் விதைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது பலருக்குத் தெரியாது. வைட்டமின்கள் ஏ, பி, ஈ மற்றும் கே தவிர, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. துளசி விதைகளை தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் கொழுப்பு எரியும் செயல்முறை துரிதப்படுத்தப்படுகிறது. தொப்பை கொழுப்பு குறையத் தொடங்குகிறது.
எலுமிச்சை
காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், அதிகரிக்கும் எடையில் அதன் தாக்கம் நேரடியாக இருக்கும். இதனால் வளர்சிதை மாற்றம் மேம்படுத்துவதோடு, செரிமானமும் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க...
Share your comments