நமது உடல் எடையை குறைக்க, வாயில் நுழையாத பெயர்களை கொண்ட பலவற்றை வாங்கிச் சாப்பிடுவோம். பிடித்தவற்றை வெறுத்து, பிடிக்காதவற்றை உண்ண வைக்கும் கொடுமைக்காரன் தான் இந்த டயட். நாம் அறியாமலேயே, ஒவ்வொரு நாளும் சாப்பிடும் உணவுப் பொருட்களில் சில பொருட்கள் நம் எடையை குறைப்பதில் சிறப்பாக செயல்படுவது உண்டு. அவற்றை சரியான முறையில் சாப்பிட்டால் போதும் எடையை எளிதில் குறைக்க முடியும். அப்படி ஒரு பொருள் தான் வெங்காயம்.
வெங்காயம் (Onion)
வெங்காயம் இல்லாமல் பெரும்பாலான வீடுகளில் சமையல் இல்லை என்றே சொல்லலாம். பல உணவுகளின் பொதுவான மூலப்பொருளாக இது இருக்கும். டைப் 2 நீரிழிவு, இதய நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்து. அப்படி உடலில் உள்ள கெட்டியான கொழுப்பை கூட வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து அகற்ற உதவுகிறது.
கலோரி விவரம் (Calories Details)
வெங்காயம் மிகக் குறைந்த கலோரி எண்ணிக்கை மற்றும் அதிக கரையக்கூடிய நார்ச்சத்து கொண்டவை. அதனால் ஒரு நபர் நீண்ட நேரம் பசியை உணராமல் இருக்க உதவும். ஒரு கப் (160 கிராம்) நறுக்கிய வெங்காயத்தில் இருப்பது வெறும் 64 கலோரிகள். இது மட்டுமில்லாமல் இதில் கால்சியம், இரும்பு, போலிக் ஆசிட், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. வெங்காயத்தில் உள்ள சத்துகள் மற்றும் பயன்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
- வெங்காயத்தில் உள்ள தாது உப்புகள் குடலில் செரிமானத்தை தூண்டும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
- வெங்காயத்தில் உள்ள குர்செடின், சல்பர் போன்றவை ரத்த சர்க்கரையை சீராக்கும்.
- இதில் உள்ள வைட்டமின் சி, கொலாஜன் எனும் புரதம் உருவாகுவதற்கு உதவுகிறது. இது சருமம் மற்றும் முடிக்கு வலிமை சேர்க்கிறது. மேலும் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
- வெங்காயத்தில் அதிக அளவு கால்சியம் இருப்பதால், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- இதில் 25க்கும் மேற்பட்ட வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது புற்றுநோய் வராமல் பாதுக்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எடை குறைக்க டிப்ஸ் (Tips for Weight Loss)
வெங்காயச் சாறு (Onion Juice)
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, வெங்காயத்தை பொடியாக வெட்டி, அதில் சேர்த்து, பத்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் உள்ள வெங்காய சாறை வடிக்கட்டியோ இல்லை அப்படியே சேர்த்தும் உண்ணலாம்.
வெங்காய சூப் (Onion Soup)
ஒரு கடாயில் ஒன்று அல்லது இரண்டு வெங்காயத்தை, பொடியாக நறுக்கி போட்டு, அதில் சிறிது இஞ்சி, பூண்டு சேர்த்து பின் நன்கு வதக்க வேண்டும். தேவைப்பட்டால், காய்கறி அல்லது சிக்கன் சிறிது சேர்த்து கொள்ளலாம். அவை வெந்தவுடன் சிறிதளவு மிளகு, சீரகத்தூள் தூவி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து சூப் செய்யலாம்.
பச்சை வெங்காயம் (Green Onion)
எந்த வேளை, உணவு எடுத்து கொண்டாலும் ஒரு வெங்காயத்தை விரும்பிய வண்ணம் வெட்டி அதில், சிறிது எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து சாலட் போல் செய்து உண்ணலாம்.
மேலும் படிக்க
யோகா: செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்!
சூரிய புயல், இன்று பூமியைத் தாக்க வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Share your comments