1. வாழ்வும் நலமும்

ஆயுர்வேதம் சொல்லும் மூலிகை பொடிகள் மற்றும் அதன் ஈடில்லா பலன்கள் பகுதி - 2

KJ Staff
KJ Staff
Indian Green Herbs

பொடிகள் மற்றும் அதன் பலன்கள்

திரிபலா பொடி - சர்க்கரை வியாதி, மல சிக்கல்,  அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி - தொண்டையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஏற்ற பொடி. தொடர்ந்து உட்கொண்டால் குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி  - உடலில் உண்டாகும் உஷ்ணம், உள் மற்றும் வெளி மூல நோய்க்கு சிறந்த மருந்து.

செம்பருத்திபூ பொடி -  இந்த பூவினை உலர்த்தி பொடி செய்து தலைக்கு தேய்த்து வர முடி நன்கு பளபளக்கும். அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி - மஞ்சள் காமாலை, ஈரல் பிரச்சனை, முடியுதிர்வு பிரச்சனை தீர்க்க வல்லது.

சிறியா நங்கை பொடி - எல்லா வகையான விஷக்கடிக்கும் ஏற்ற மருந்து, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

கீழாநெல்லி பொடி - மஞ்சள் காமாலை நோய்க்கு ஏற்ற தலை சிறந்த மருந்து. இரத்த சோகை நோய்க்கு ஏற்றது.

முடக்கத்தான் பொடி - பெயரை வைத்தே புரிந்து கொள்ளலாம், ஆம் எல்லா விதமான மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு ஏற்றது.

கோரைகிழங்கு பொடி -  இது உடல் பொலிவு மற்றும் சரும பாதுகாப்புக்கு ஏற்றது. தொடர்ந்து உபயோகிக்கும் பொழுது சருமம் மிருதுவாக இருக்கும்.

குப்பைமேனி பொடி - குப்பை போன்ற இடங்களில் காண பட்டாலும் தோல் பிரச்சனைகளுக்கு ஏற்றது. தேமல், சொறி, சிரங்கு, போன்றவற்றிற்கு ஏற்றது.

பொன்னாங்கண்ணி பொடி - இது உடல் சூட்டை தணிக்க வல்லது,  கண்களில் தோன்றும் கட்டி, வீக்கம், எரிச்சல் போன்ற நோய்க்கு சிறந்தது.

Traditional Herbs

முருஙகைவிதை பொடி - இது சமீப காலமாக அதிக அளவில் பேசப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கொடுக்க கூடியது. அது மட்டுமல்லாது ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி - உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.

வாதநாராயணன் பொடி - வாத நோய்களுக்கான நிவாரணி. அனைத்து விதமான பக்கவாதம், கை, கால் மூட்டு வலிக்கு ஏற்றது.

பாகற்காய்  பொடி - உடலில் உள்ள கிருமிகள், புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. உடலில் உள்ள இன்சுலின் அளவை சமன் படுத்த கூடியது.

வாழைத்தண்டு பொடி - எல்லா விதமான சிறுநீரக பிரச்சனைகள், சிறுநீரக கோளாறு, சிறுநீரக கல் அனைத்திற்கும் மிகச் சிறந்தது.

சித்தரத்தை பொடி - நாள் பட்ட சளி, இருமல் போன்றவற்றை நிக்க கூடியது. சற்று காட்டமாக இருப்பதால் தேனுடன் கலந்து சாப்பிடலாம். வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி -  பெயரை பார்த்தவுடன் புரிந்திருக்கும், ஆம் இது பொடுகு தொல்லை, பேன் தொல்லை,  முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி - சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை  எனபர்கள். நம் உடலில் உண்டாகும் அஜீரணம், போன்ற பிரச்சனைகளை தீர்த்து செரிமானம் ஒழுங்காக நடைபெறும்.

ஆடாதொடை பொடி - சுவாச கோளாறு,ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் ஆடாதொடை பொடியினை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல மாற்றம் தெரியும்.

கருஞ்சீரகப்பொடி - நீரழிவு நோய், குடல் புண் போன்றவை நீங்கும்.

வெட்டி வேர் பொடி - தினமும் நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு படிப்படியாக குறைந்து குளிர்ச்சி தரும். இந்த நீரில் குளித்து வந்தால் வேர்க்குரு, வேர்வை வாடை  வரத்து. நல்ல முழுவதும் புத்துணர்ச்சி தரும்.

Siddha Medicine

வெள்ளருக்கு பொடி - பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி போன்ற பிரச்சனையை நிக்கும். இது ஒரு சிறந்த இரத்த சுத்தி ஆகும்.

நன்னாரி பொடி - கோடை காலங்களில் நாம் விரும்பி பருகும் சர்பத்திகளில் நன்னாரி சர்பத். இதில் உடலை சூட்டை தவிர்த்து, நன்கு சிறுநீரை வெளியேற்றுகிறது.  நா வறட்சி கட்டுப்படும்.

நெருஞ்சில் பொடி - இது சிறுநீரக கோளாறு மற்றும் அடைப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

பிரசவ சாமான் பொடி - ஆம் நீங்கள் நினைப்பது போலவே பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்வதுடன் உடல் வலிமை பெறும்,  தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி - பண்டைய காலங்களில் நம்மூர் பெண்களின் அழகின் ரகசியம் இது தான்,  தினசரி பூசி வந்தால் முகம் பொலிவடைவதுடன் நாள் முழுவதும் நறுமணம் வீசும்.

Indian Spices

பூலாங்கிழங்கு பொடி -  இந்த கிழங்கை நலுங்கு மாவு தயாரிப்பில் பயன் படுத்துவார்கள். இதை உபயோகித்து குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி - பொதுவாக இதை பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இது பால் வாடை, வாந்தி, குமட்டல், ஒவ்வாமை  நிக்கும்.

சோற்று கற்றாழை பொடி -  குமரி என்று அழைக்கப்படும் கற்றாழை உடல் குளிர்ச்சி, முகப்பொலிவு போன்றவற்றை கொடுக்கும்.

மருதாணி பொடி - நம்மூர் பெண்கள் பூசி கொள்ளும் மூலிகை,  கை, கால்களில் பூசி வர பித்தம் குறையும். தலைமுடியில் தேய்த்து குளித்து வர இளநரை  மறையும்.

கருவேலம்பட்டை பொடி - இப்பொடியினை தொடர்ந்து தேய்த்து வர நம் பற்களில் உண்டாகும் கறை, சொத்தை, பூச்சிபல், பல்வலி போன்றவை குணமாகும்.

பகுதி 1 இல் இடம் பெற்றதை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://tamil.krishijagran.com/health-lifestyle/do-you-know-about-herbal-powders-and-its-medicinal-benefits-here-your-guideline-refer-and-use-it/

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Know About Herbal Powders And Its Abandons Health Benefits Without Any Side Effects Published on: 28 June 2019, 03:05 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.