1. வாழ்வும் நலமும்

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் சூப்பர் உணவுகள்

Daisy Rose Mary
Daisy Rose Mary
Image credit by: Insider

பணிச்சுமை மற்றும் தவறான உணவு முறை காரணமாக, முப்பத்தைந்து வயதைத் தாண்டுவதற்கு முன்பாகவே உயர் ரத்த அழுத்தம் (High Blood Pressure) அல்லது குறைந்த ரத்த அழுத்தம் (Low Bleed Pressure) வந்துவிடுகிறது. அதனைக் கட்டுப்படுத்துவதற்காக நாம் வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

எனினும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாத நிலையில், மூளை பாதிப்பு (Brain Damage), மாரடைப்பு (Stroke) உள்ளிட்டவை ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும் ஆபத்தும் உள்ளது. எனவே ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க அன்றாடம் காலை, மாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்வதும், அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்ளுவதும் முக்கியம். அதேநேரத்தில், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்வதும் உயிர்காக்கும் யுக்திகள் ஆகும்.

அத்தகைய சூப்பர் உணவுகள் (Super Foods) பட்டியல் இதோ

Image credit by:Daily meal

வாழைப்பழம் - (Banana)

அன்றாட உணவில் தவறாமல் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வது அவசியம். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இதயத்திற்கு ரத்தம் ஒரே சீராகப் பாய்வதற்கு உதவி, மாரடைப்பு (Stroke) ஏற்படுவதைத் தடுக்கிறது.

முழு தானியங்கள் - (Whole Grains)

பார்லி, கொண்டைக்கடலை, நிலக்கடலை, பச்சைப்பயறு, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இத்துடன் ஓட்ஸ்ஸையும் (Oats) இணைத்துக்கொள்வது, நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க உதவும்.

கீரைகள் (Spinach)

இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கீரைகள்தான் மிகச்சிறந்த சூப்பர் ஃபுட். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் இதயத்தின் ஆரோக்கியத்தைக் காக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு (Sweet Potato)

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள அதிகளவிலான பொட்டாசியம், ரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

கொழுப்பு நிறைந்த பால் (Fat Milk)

அதிக கொழுப்புச்சத்து நிறைந்த பாலைத் தேர்வு செய்யுங்கள். இதில் உள்ள கால்சியமும், வைட்டமின் டியும், ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், எலும்புகளுக்கும் வலுஊட்டும்.

Image credit by: Better health

தர்பூசணி (Watermelon)

தர்பூசணிப்பழத்தை அதிகளவில் சாப்பிடுங்கள். நீர்ச்சத்துள்ள தர்பூசணியில், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியமும் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருவதுடன், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

ஆரஞ்சு (orange)

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும் மற்றொரு சிறந்த பழம் ஆரஞ்சு. இதில அதிகளவில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும்.

டார்க் சாக்லேட் (Dark Chocolate)

50 முதல் 70 சதவீதம் கோ-கோ (Co-Coa) நிறைந்த சாக்லேட்டுகளை தினமும் சாப்பிடலாம். இவை ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

சூரியகாந்தி விதைகள் (Sunflower seeds)

சூப்பர் விதை (Super Seeds) எனப்படும் சூரியகாந்தி விதையில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் இ, மற்றும் போலிக் அமிலம் (Folic Acid) ஆகியவை அதிகளவில் உள்ளன.
ஒரு கையளவு சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவது, இதயத்தின் ஆரோக்கியத்தைக் காப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க உறுதுணையாக இருக்கும்.

திராட்சை ஜூஸ் (Grape juice)

திராட்சைப்பழ ஜூஸில் உள்ள பாலிபினால்ஸ் (Polyphenols) ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. எனவே அதிகளவில் திராட்சைப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


Elavarase Sivakumar
Krishi jagran

இத்தனை பயன்கள் ஸ்கிப்பிங்கிலா? இது தெரியாமல் போச்சே!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானியங்கள்!!

வெள்ளை சர்க்கரைக்கு தவிர்ப்பது எப்படி? ஒரு சில டிப்ஸ்!!

English Summary: Know your Super Food to keep Control Blood Pressure Published on: 30 June 2020, 05:13 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.