கோடையில் வீட்டுக்குள் வரும் வெப்பத்தை குறைக்க செடி, கொடிகளை கொண்டு பசுமை சுவர் அமைக்கலாம். சுவர்களில் பசுமை தாவரங்கள் மரம், செடி. கொடிகள் நம்மை போல் சுவாசிக்கும். கார்பன் டை ஆக்சைடை இழுத்து, ஆக்சிஜனை வெளியிடுகின்றன. இவை வீட்டில் பசுமை சூழலை உருவாக்கும். கோடை வெப்பம் குறைக்கும், அதனால் வீட்டுக்குள் வெப்ப காற்று நுழைவதை தடுக்க பசுமை சுவர்களையும் அமைக்கலாம். சுவர்களில் பசுமை தாவரங்களை பரவசெய்து வளர்ப்பதே பசுமை சுவர். பசுமை சுவர் அமைப்பது எளிமையான முறை தான்.
பசுமைச் சுவர் (Green Wall)
வீட்டின் கட்டுமான பணியின் போது சாதா சுவர்களுடன் சேர்த்து மணல் நிரப்பும் வகையில் கட்டுமானங்களை அமைத்து, மணல் நிரப்பி செடிகளை நட்டு வளர்க்கலாம். வீட்டில் பந்தல் உருவாக்கி வேர்கள் திறந்த வெளியில் வளரும் வகையில் செடிகளை கொண்டு பசுமை சுவர் உருவாக்கலாம். சில செடிகளின் வேர்கள் நீரில் இருந்தாலே போதுமானது.
வெப்பம் குறையும் (Reduce Heat)
வீட்டின் உட்புறங்களில் வளர்க்க ஏதுவாக உள்ள உட்புற தாவரங்களை கொண்டே பசுமை சுவர் அமைக்கலாம். சுவர்கள் பெரும்பாலும் வீட்டினை அலங்கரிப்பதில் பிரதானமாக விளங்குவதால் அலங்காரமாகவும் இருக்கும். உள் அலங்காரத்தில் செடிகள் முக்கிய பங்கு வகிப்பவை என்பதால் செடிகளை கொண்டு அலங்கரிப்பது வீட்டை ரம்மியமாக்கும். இவை வெப்பத்தின் தாக்கம் உணர முடியாத அளவு பசுமை கலந்த சூழலை உருவாக்கும் விதத்தில் அமைவதால் முதியோர்கள், நோயாளிகளுக்கு ஆரோக்கியம் பெருகும். இத்தகைய பசுமை சுவர் தாவரங்களை உள் சுவர்கள், வெளி சுவர்களிலும் அமைக்கலாம்.
பசுமை சுவர் மழை காலங்களில் சுவர்களில் ஏற்படும் நீர்க் கசிவுகளை தடுப்பதுடன் சுவர்களில் ஏற்பட்டுள்ள வெடிப்பை மறைக்கும். நறுமண செடிகள், பூச்சி விரட்டிகள், மருத்துவ தாவரங்கள் போன்ற பலவகையான செடிகளை பசுமை சுவர்களில் வளர்க்கலாம், வண்ண பூச்செடிகளையும் கலைநயத்துடன் வளர்க்கலாம். கொடி, கொத்து, குச்சி வகை தாவரங்கள் நர்ச்சரியில் கிடைப்பதால் எளிதில் வாங்கி வளர்க்கலாம். வீட்டுத் தோட்டங்கள் அமைப்பது ஒருபுறம் இருக்க, பசுமை சுவர்களுடன் வீடுகள் அமைப்பதும் பிரபலமாகி வருகிறது. இவை கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிவதுடன் இயற்கையான சூழலையும் பிரதிபலிக்கும்.
மேலும் படிக்க
அதிக மகசூல் பெற இயற்கை முறையில் பூச்சி விரட்டி செய்வது எப்படி?
எங்கே போனது மீண்டும் மஞ்சப்பை திட்டம்: தொடர்கிறது பிளாஸ்டிக் ஆதிக்கம்!
Share your comments