1. வாழ்வும் நலமும்

இதய பாதிப்பைத் தடுக்கும் மிளகின் மருத்துவப் பயன்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Pepper
Credit : Dinamalar

இதய நாளங்களில் படியும் கொழுப்பு திரட்சி இறுதியில், இதய நாள இறுக்க நோயாக முற்றி, இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. இதற்கு, 'கொரோனியல் ஆர்ட்டீரியல் நோய்' என்று பெயர். இந்த நோயால் இதயம் செயலிழப்பதை, 1,500 ஆண்டுகளுக்கு முன்னரே திருமூலர் என்னும் சித்தர், 'இடப் பக்கமே இறை தெரிந்தது' என்றார். 'கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே என்று சித்த மருத்துவத்தில் இதை சடுதி மரணம்' என்று சொல்லப்படுவதுண்டு.

ஆராய்ச்சி

இந்த நோய் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர், உலகிலேயே இந்த நோய் இல்லாத இடம் ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்து, ரோமாபுரியில் உள்ள சிற்றுாரில் இந்நோயால் இறந்தவர் யாருமில்லை என்று அறிந்து, அங்கு சென்று சில காலம் தங்கி, அம்மக்களின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறைகளைப் பற்றிய குறிப்புகளை திரட்டி ஆராய்ந்தார். முடிவில், அவர்களின் அன்றாட உணவில் மிளகு (Pepper) அதிகம் சேர்க்கப்படுவதை அறிந்தார்.

கொழுப்புத் திரட்சி

அமெரிக்கா திரும்பிய பின், தன் ஆராய்ச்சியில், மிளகு மற்றும் ரத்த நாள அடைப்பு பற்றி பல காலம் ஆராய்ந்த பின், மிளகு சாப்பிடுவதால், ரத்த நாளங்களில் படியும் கொழுப்பு திரட்சி கரைந்து விடுகிறது. இதயம் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது என்பதை உறுதி செய்து, உலகிற்கு அறிவித்தார், ஜான் நெகுலஸ்கோ என்ற விஞ்ஞானி 25 ஆண்டுகளுக்கு முன். கொழுப்புத் திரட்சி என்னும் நஞ்சை இதய நாளத்தில் படியாமல் தடுக்கும் காப்சைசின் என்னும் வேதிப் பொருள் (Chemical) மிளகில் நிறைந்து இருப்பதே இதற்கு காரணம்.

உணவில் உள்ள விஷத்தன்மையை முறித்து விடும் ஆற்றல் மிளகிற்கு உண்டு என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள், பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழியை சொல்லி வைத்தனர். இப்போதும் நம் கிராமங்களில் பூச்சிகள் மற்றும் தாவர நச்சுக்களை நீக்கும் மிளகு கஷாயம் குடிக்கும் வழக்கம் உள்ளது. அதே போல ரத்தத்தில் சேரும் நச்சுக்களை நீக்கவே, அன்றாடம் உணவில் மிளகு ரசம் சேர்க்கும் பழக்கம் உள்ளது.

கொழுப்பு குறைய

சுக்கு 100 கிராம், மிளகு 100 கிராம், வெந்தயம் 100 கிராம் எடுத்து வெறும் வாணலியில் லேசாக வறுத்து பொடி செய்து, தினமும் காலை, இரவு இரு வேளை, உணவுக்குப் பின் ஒரு டீ ஸ்பூன் மோரில் கலந்து குடித்தால், இரண்டு, மூன்று மாதங்களில் கணிசமான அளவு கொழுப்பு குறைந்து விடும்.

தகவல்:
மூலிகை மணி க.வேங்கடேசன்,
73388 23784

மேலும் படிக்க

தினமும் ஒரு பச்சை வெங்காயம்: நன்மைகளோ ஏராளம்!

பால் குடிப்பதால் சர்க்கரை நோய் வருவதில்லை! ஆய்வில் தகவல்!

English Summary: Medicinal uses of pepper to prevent heart attack! Published on: 14 July 2021, 08:50 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.