அமிலத்தன்மை மற்றும் கோடைக்காலச் சோம்பலைப் போக்கப் புதினா டீ குடியுங்கள்; அனைத்து ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
புதினாவை கோடைகால உணவுகளில் சேர்த்து சுவையைப் பெறலாம். சுவையோடு ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். மேலும் இந்த பழங்கால மூலிகையை அன்றாட உணவில் சேர்க்கப் பல வழிகள் உள்ளன. அது தேநீர், ஷேக்ஸ், கறிகள் மற்றும் இனிப்புகளுடன் இணைத்து உண்ணலாம். கோடை வெப்பம் தாங்க முடியாததாக இருக்கும் போது, குளிர்ச்சியாக இருக்க ஐஸ்கிரீம்கள், சோடாக்கள் மற்றும் ஷேக்குகளை விட அதிகமாக உடலுக்குப் பலன் அளிக்கக் கூடியதாக இருப்பது புதினா ஆகும்.
புதினா என்பது பழங்காலத்திலிருந்தே அதன் மருத்துவக் குணங்களுக்காகப் போற்றப்படுகிறது. இது ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் தோன்றியதாக அறியப்படுகிறது. மேலும் கிரேக்கர்கள் மிந்தா, நதி நிம்ஃப் என அழைக்கப்படும் அவர்களின் புராணக் கதாபாத்திரத்தின் பெயரால் இதற்குப் புதினா எனப் பெயரிட்டனர். ஆப்பிள், எலுமிச்சை, வாழைப்பழம், ஸ்ட்ராபெரி முதல் சாக்லேட் புதினா வரை பல வகையான புதினா வகைகள் உள்ளன. மேலும் இந்த மூலிகை இருமல் மற்றும் சளி, வலி நிவாரண மருந்துகள் மற்றும் மிட்டாய் பொருட்கள் முதலான பிற உணவுகளில் சுவையூட்டும் பொருளாகப் பரவலாகப் புதினா பயன்படுத்தப்படுகிறது.
ஊட்டச்சத்து நிபுணர் முன் கனேரிவால், கோடைகாலச் சூப்பர்ஃபுட்ஸ் தொடரின் ஒரு பகுதியாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பல கோடைகால உணவுகள் பற்றிய சுவாரஸ்யமான நுகர்வுகளைப் பகிர்ந்துள்ளார். அவரது சமீபத்திய இடுகையில் புதினாவின் பல நன்மைகளைப் பற்றி பேசினார்.
புதினாவில் உள்ள மெந்தோல் உடலின் செரிமான அமைப்புக்கு ஒரு இனிமையான விளைவை அளிக்கிறது. உடலின் வெப்பத்தைத் தணிக்கும். அதோடு, சருமத்திற்குச் சிறந்ததாகவும் இருக்கின்றது.
"நம் நாட்டில் கோடைக்கால உணவாகப் புதினா எப்போதும் உள்ளது. உடலுக்கு உடனடி குளிர்ச்சியைத் தருவது மட்டுமின்றி, சருமத்திற்கும் சிறந்தது. சட்னியில் இருந்து அழகுக்கலைக்காகப் பயன்படுத்தும் பொருட்கள் வரை பல்வேறு வழிகளில் இதைப் பயன்படுத்தலாம்.
புதினாவின் நன்மைகளை விளக்கும் நிலையில் புதினாவில் மென்தோல் என்ற கலவை உள்ளது. இது உங்கள் செரிமான அமைப்புக்கு ஒரு இனிமையான விளைவை அளிக்கிறது மற்றும் அமிலத்தன்மை மற்றும் கோடைக்கால சோம்பலைத் தடுக்க உதவுகிறது. கோடைக்கால தலைவலியைக் குணப்படுத்துகிறது. அதோடு சருமத்தை புதுப்பிக்கிறது.
கோடைகால தலைவலியிலிருந்து விடுபட இதைச் சாப்பிடுமாறு வலியுறுத்தப்படுகிறது. புதினாவை உட்கொள்வது உடலுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சருமத்தில் புத்துணர்ச்சியூட்ட விளைவையும் ஏற்படுத்தும். இது சருமத்தை மிகவும் அழகாகவும், புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதுதான். அதாவது புதினாவில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன என்பதைக் கருத்தில் கொண்டு புதினாவை உணவில் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
புதினா டீ செய்முறை
ஊட்டச்சத்து நிபுணர் முன் கனேரிவால், கோடைகால முகப்பரு மற்றும் வெப்பமான காலநிலையில் ஏற்படும் உஷ்ணத் தடிப்புகளைச் சமாளிக்க மக்களுக்கு உதவும் புதினா டீயின் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* 6-7 புதினா இலைகள்
* 1 கப் வெந்நீர்
முறை
- 1 கப் சூடான நீரில் புதினா இலைகளை சேர்க்கவும்
- அதை 10 நிமிடங்கள் ஊற விடவும்
- வடிகட்டி மற்றும் சூடாக குடிக்கவும்
புதினா இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளன, மேலும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துவதோடு ஆரோக்கியமான மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் அறியப்படுகிறது. புதினா இலைகளில் கலோரிகள் மிகக் குறைவாக இருப்பதால் எடையைக் குறைக்கவும் உதவுகிறது என்பது கூடுதல் நன்மை ஆகும்.
மேலும் படிக்க
மாதவிடாய் வலியைப் போக்க சில தீர்வுகள்!
இனிப்புகளை உணவுக்கு முன்தான் சாப்பிட வேண்டும்? ஏன் தெரியுமா?
Share your comments