கடுகு
ஏராளமான மருத்துவ குணங்கள் கடுகில் காணப்படுகிறது. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்கள் முதல் இடம் கடுகிற்கு உள்ளது. அதனால் தான் குழம்பு வகைகளிலும் பதார்த்தங்களிலும் தாளித்து பயன்படுத்துகிறோம்.
கடுகின் வகைகள்
கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என வகைகள் உள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் பயிர் செய்யப்படுகிறது. கருங்கடுகில் காரம் அதிகமாகவே காணப்படும்.
கடுகின் குணங்கள்
இருமலுக்கு கடுகு சிறந்த மருந்தாகும். கடுகு காரம் மிக்கது அதனால் உடலுக்கு வெப்பத்தை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும். கடுக்குக்கு தனி சுவை என்று இல்லை. தாளிக்கவும் வாசனைக்காகவும் பயன்படுத்தலாம்.
கடுகில் உள்ள சத்துக்கள்
கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்புச்சத்து, செலினியம், மெக்னீசியம், புரதச்சத்து, நார்ச்சத்து கொண்டவை. மேலும் தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், போலேட்ஸ், நியாசின், பான்டோ தெனிக் அமிலம் ஆகிய பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் உள்ளன.
கடுகின் மருத்துவ பயன்கள்
கட்டிகள் கரையும்
கோடை காலங்களில் பலருக்கு உடலில் கட்டிகள் ஏற்படும் அந்த நேரத்தில் கடுகை அரைத்து பூசினால் சீக்கிரமாக கட்டி உடைந்து நிவாரணம் கிடைக்கும்.
உடல் பருமன் குறையும்
கடுகு உடல் எடையை குறைப்பதில் பெரும்பங்கு வகுக்கிறது. எளிதில் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் நார்சத்து கொண்டது. எடையை அதிகரிக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து ஆற்றலை அதிகரிக்கும்.
எலும்புகள் உறுதியாகும்
நியாசின் என்ற வகை சத்து ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. எலும்புகளின் உறுதிக்கு கால்சியம் மற்றும் தாமிரம் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்திக்கும் உதவி ஆக இருக்கிறது.
மேலும் படிக்க:
Share your comments