பொதுவாக பழங்கள் ஊட்டச்சத்து மிகுந்தவை, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவை நமது உடலுக்கு நன்மை பயக்கின்றன என்பது பலரும் அறிந்த விஷயமாகும். ஆனால் மற்ற பழங்களை விடவும் நோனி பழமானது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என தெரியுமா? இளமையான தோற்றம் மற்றும் தலை முடி ஆரோக்கியம் போன்ற பல விஷயங்களுக்கு, இந்த பழம் உதவுகிறது. என்ன பழம் இது? இது தலைமூடியை என்ன செய்யும் போன்ற பல கேள்விகளுக்கான பதிலாக, இந்த பதிவு இருக்கும்.
நோனி பழமும் அதன் ஊட்டச்சத்தும்:
பலருக்கு இந்த பழத்தின் பெயர் புதியதாக இருக்கலாம். இந்த பழம் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்று சொல்ல வேண்டும். ஆனால் ஆயுர்வேதத்தில் முக்கியமான பழமாக நோனி இருப்பது குறிப்பிடதக்கது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பழங்களில், நோனிப் பழமும் ஒன்றாகும். இந்த பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடல் உயிரணுக்களை மீளுருவாக்கம் செய்ய உதவுவதில்லை என்றாலும் அவற்றிற்கு வைரஸால் ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது என்பது குறிப்பிடதக்கது.
நோனி பழமானது Vitamin-C, Vitamin-A, Vitamin-B3 மற்றும் இரும்பு போன்ற ஆக்ஸிஜனேற்றிகளை அதிகமாக கொண்டுள்ளது. இவை அனைத்தும் உடலின் உள் ஆரோக்கியத்திற்கு பயன்படுவதோடு சரும அழகிற்கும் உதவுகிறது. நோனி பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை, இப்போது பார்க்கலாம்.
மேலும் படிக்க: மகாராஷ்டிரா மாநில தமிழ் பாட புத்தகத்தில் இடம்பெற்ற தமிழக மாணவி
இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது:
ஒரு ஆய்வின்படி நோனி பழத்தில் நீரிழிவு நோய்க்கான எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளனவாம். யாரெனும் நீரிழிவு நோயை தடுக்க விரும்பினாலோ அல்லது அதன் நோய் அபாயத்தில் இருந்து விலகி இருக்க விரும்பினாலோ, அவர்களுக்கு நோனி பழச்சாறு உபயோகமானதாக இருக்கும். மேலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதை கட்டுப்படுத்த முடியாதவர்கள் நோனி பழச்சாறை பயன்படுத்தி பலன் பெறலாம். இதை மூன்று வாரங்கள் பயன்படுத்துவதன் மூலம் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
நோனி பழத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், ஆண்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்ற நன்மைகள் உள்ளன. அவை சரும மேம்பாட்டிற்கு உதவுகின்றன. நோனி பழச்சாறு குடிப்பது என்பது உங்கள் இரத்தத்தை நச்சுத்தன்மையற்றதாக மாற்ற உதவுகிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மையும் பயக்கிறது. இவை அனைத்தும் நீங்கள் அழகான சருமத்தை பெற உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க: வேளாண் செய்திகள்: உளுந்து விதைகள் 50% மானியத்தில் பெறலாம்
தலை முடி ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது?
தலைமுடி ஆரோக்கியம் என்பது இந்திய பெண்களுக்கு முக்கியமான விஷயமாகும். அதிகமான வியர்வை மற்றும் ஈரப்பதமானது, உங்கள் உச்சந்தலையில் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு காரணமாக அமைவது மட்டுமில்லாமல் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் முடியின் மயிர்கால்கள் சேதமடைகின்றன, மூடி கொட்டுதல், மூடி சேதம் போன்ற பல பிரச்சனைகள் வருகின்றன.
இதன் காரணமாக நீங்கள் உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கலாம். ஆனால் இதற்கு நோனி பழச்சாறு முழுவதுமாக உதவுகிறது. நோனி பழச்சாறானது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டதாகும். எனவே வியர்வையால் தலையில் ஏற்படும் அசெளகரியத்தை, இது குறைக்கிறது.
மேலும் படிக்க:
நீரழிவு நோயால் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்யும் முருங்கைப்பூ.!
இலக்காகிய மீன்களில் காணப்படும் பொதுவான அறிகுறிகள் மற்றும் காரணிகள்
Share your comments