ஆரோக்கியமான பால் உணவான பன்னீர், அனைவராலும் விரும்பப்படும் ஒரு உனவாகும். ஆனால், பன்னீர் சாப்பிடும் சரியான முறை என்ன என்பது பலருக்கு தெரிவதில்லை. பால் உணவுகளிலே அதிகம், விரும்பப்படும் பால் உணவு பன்னீர், எனவே இதை சாப்பிடும் சரியான முறை அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
சுவையில் சிறந்த பன்னீர் சாப்பிட விரும்பாத சைவ உணவு பழக்கம் உள்ளவர்களை பார்ப்பது மிகவும் அரிதாகும். ஆனால், பன்னீரை சாப்பிடுவதில் சரியான முறையை கடைபிடித்தால், அதன் முழுமையான ஊட்ட சத்துக்களை பெற முடியும்.
பலருக்கு, பன்னீரை பச்சையாக சாப்பிட வேண்டுமா அல்லது பொரித்தால் நல்லதா என்ற குழப்பம் இருக்கலாம். பன்னீரை எப்படி உட்கொள்ள வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பன்னீரில், ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருந்தாலும், அதே நேரத்தில், கலோரிகள் குறைவாகவும் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடதக்கது. பன்னீர் உட்கொள்வதால் உடலுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதற்கு இதுவே காரணமாகும்.
பன்னீர், சமைப்பதால் சில சத்துக்கள் இழக்கப்படுகின்றன என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் பன்னீரை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். இரண்டு வகையிலும் பன்னீர் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், பன்னீரை சமைக்கும் போது, அதில் உள்ள சில சத்துக்கள் அழிந்துவிடுகின்றன. இதன் காரணமாக நீங்கள் அதன் பலனை முழுமையாக பெற முடியாமல் போக வைப்புள்ளது.
மேலும், பன்னீரில் ஏராளமான புரதங்களும் நல்ல கொழுப்பு சத்தும் உள்ளது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் வலுவாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். மேலும், இதனால் எலும்புகள் வலுவடையும். மேலும், எடையும் கட்டுக்குள் இருக்கும் என்பது சிறப்பாகும்.
சாப்பிடும் முன் பேக் செய்யப்பட்ட பன்னீரை சுத்தம் செய்ய வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் வீட்டிலேயே பன்னீர் தயாரிக்கிறீர்கள் என்றாலும் சரி, அல்லது நல்ல தரமான பன்னீர் வாங்கி வந்தாலும் சரி, அதை பச்சையாகவே சாப்பிடலாம். மறுபுறம், நீங்கள் கடையில் பேக் செய்யப்பட்ட பன்னீரை வாங்கியிருந்தால், அதை பச்சையாக சாப்பிடுவதற்கு முன்பு சிறிது நேரம் வெதுவெதுப்பான நீரில் போட்டு வைத்து சுத்தம் செய்து உட்கொள்வது நல்லது.
பேக் செய்யப்பட்ட, சில நாட்களுக்கு முன் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்பதால், அதில் அழுக்கு அல்லது பாக்டீரியா வளரும் அபாயம் இருக்கிறது. அதனால், வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் போட்டு வைத்திருந்த பிறகு, பன்னீரை எடுத்துப் பயன்படுத்தி சமைத்தாலோ அல்லது பச்சையாக எடுத்துக்கொண்டாலோ பிரச்சனை இல்லை.
மேலும் படிக்க:
2022 டிஜிட்டல் பட்ஜெட் தாக்கலை, டிஜிட்டல் மூலம் பார்க்க, செயலி அறிமுகம்
தமிழகம்: கல்லூரிகள் திறப்பதால், தேர்வுகள் நேரடியாக நடக்குமா? அல்லது ஆன்லைனிலா?
Share your comments