1. வாழ்வும் நலமும்

சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் அதிசயம் நிகழ்த்தும் பப்பாளி

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

அகத்தையும், புறத்தையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுது பப்பாளிப் பழம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் இளமையைத் தக்க வைத்துக்கொள்ள உதவும் என்கின்றன ஆய்வுகள்.

நோய்களைத் தீர்க்க, கூந்தல் பிரச்சனைகளை நீக்க, சரும பராமரிப்பு என பல்வேறு வகைகளில் பப்பாளி நமக்கு பயன்படுகிறது. இனி சரும பராமரிப்பிற்கு பப்பாளியைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம். 

எண்ணெய் பிசுக்கை நீக்குகிறது

பப்பாளியில் வைட்டமின் சி, ஏ, பீட்டா கரோட்டீன் (Beta carotin) ஆகியவை நிறைந்துள்ளன. எனவே பப்பாளி பழத்தின் சிறுதுண்டை நன்கு மசித்து, அதனுடன் தயிர் சேர்ந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெண் பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

நேச்சுரல் ஸ்கிரப் (Natural Scrap)

பப்பாளி பழத்தின் துண்டு மற்றும் அதனுடன் ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் 15 நிமிடங்கள் பூசவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால், சருமத்தில் இருந்த இறந்த செல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, முகம் பொலிவுடனும், மென்மையாகவும் இருப்பதைக் காண முடியும்.


பிரைட்னிங் பேஸ்பேக் (Brightning Face Pack)

பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் மறைந்துவிடும்.

ரோமங்களை நீக்கும் (Hair remove)

பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன்படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் முளைப்பது தடைபடும். 

கூந்தல் பராமரிப்பு ஆன்டி-டான்டிரஃ ஹேர் பேக் (Anti-dandruff hair pack)

மசித்த பப்பாளியுடன் ஆப்பிள் சைடர் வினிகர் (Apple cider Vinegar) மற்றும் தேங்காய் எண்ணெயைக் கலந்து தலையில் ஹேர் பேக்காக (Hair pack) போடவும். ஆப்பிள் சைடர் வினிகர், ஸ்கேல்ப்பின் (Scalp) பிஎச் (pH) அளவை சமன் செய்து, பொடுகுத்தொல்லையைப் போக்குகிறது. தேங்காய் எண்ணெய் பொடுகால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்க உதவுகிறது.

 

Image credit: Tips clear

இதேபோல் நறுக்கிய பப்பாளி துண்டுகளுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும். பப்பாளி பழத்தில் உள்ள நொதிகள் சரும வளர்ச்சிக்கும், எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் (Citric Acid) முகத்தில் உள்ள நுண் துளைகளில் படியும் அழுக்குகளை நீக்கி பளிச் தோற்றத்திற்கும் அளிக்கும்.

மாய்ஷரைஸிங் ஹேர் மாஸ்க் (Moisturizing hair mask)

பப்பாளி, வாழைப்பழம், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டக் கலவையை கூந்தலின் ஸ்கேல்ப்பில் மாஸ்க்காகப் போடவும். இந்த மாஸ்க், கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்குவதுடன், கூந்தலை மென்மையானதாகவும் மாற்றுகிறது.

ஆண்களுக்கும் பப்பாளி

பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களின் சருமப் பராமரிப்புக்கும் பப்பாளி பழம் சிறந்த பலனைக் கொடுக்கிறது. அந்த வகையில் மற்ற பழங்களில் இருந்து சற்றே மாறுபடுகிறது பப்பாளி. சருமத்தின் நிறத்தை மெருகேற்றவும், ஆரோக்கியத்திற்கும் பப்பாளி வரப்பிரசாதமாக அமைகிறது. இரவில் பப்பாளி பழத்தின் சிறிய துண்டை மசித்து, முகத்தில் பேஸ் பேக்காகப் (Face pack)போட்டுவிட்டு, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடவும். மறுநாள் காலையில் பார்த்தால், முகம் ஆச்சரியமூட்டும் பொலிவுடன் இருப்பதைக் காணமுடியும். 

மேலும் படிக்க...

கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!

காளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்!

 

English Summary: Papaya plays a eminent role in Beauty and Hair care Published on: 07 July 2020, 07:28 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.