ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவங்கப்படும், என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
கொரோனா கோரநடனம் (Corona choreography)
உலகை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல், இந்தியாவிலும் தன் கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது.
தடுப்பூசி (Vaccine)
வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய- மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.இதன் பலனாக தற்போது நிலைமை ஓரளவுக்கு சீராகி வருகிறது. தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நோயாளிகள் (Patients)
இருப்பினும் இந்தக் கொரோனா நமக்கு பலவிதப் பாடங்களைப் புகட்டியிருக்கிறது. குறிப்பாக சர்க்கரை எனப்படும் நீரழிவு, ரத்தக்கொதிப்பு நோயாளிகள், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முதல் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.
தங்களது இந்த குறைபாட்டிற்காக மருத்துவமனைக்குக்கூட செல்ல முடியாமல், இந்த நோயாளிகள் தவிர்க்க நேர்ந்தது.
கட்டணக்கொள்ளை (Heavy Fees)
அதிலும், சில மருத்துவமனைகளில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை மற்றும் ரத்தக்தொதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பல லட்சங்களை சுருட்டின.
மருந்தே கண்டுபிடிக்கப்படாத கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி கட்டணக்கொள்ளையிலும் ஈடுபட்டன.
மக்களைத் தேடி மருத்துவம் (Medicine in search of people)
இதனால் இந்த நோயாளிகள் மிகுந்த மனஉலைச்சலுக்கு ஆளாக நேர்ந்தது.மேலும் உயிர்பயமும் நம்மை ஆட்கொள்ள நேர்ந்தது.இதனைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு மக்களைத் தேடி மருத்துவ திட்டம் என்பதை அறிமுகப்படுத்த உள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: மூன்றாவது அலையில் அதிகமாக பாதிக்கப்படலாம் என கூறப்படும் குழந்தைகள், சிகிச்சை பெறும் வகையில், 10 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
கண்காணிப்பு தீவிரம் (Intensity of monitoring)
மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி அல்லது தர்மபுரி மாவட்டத்தில், 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் வரும்.
திட்டம் துவக்கம் (Project Launch)
ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இந்தத் திட்டம் துவக்கி வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சர்க்கரை, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட தொற்றா நோய்களால் பாதிப்புள்ளவர்கள் வீடுகளுக்கே சென்று, மருத்துவம் பார்க்கப்படும்.
இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
Share your comments