Potatoes to blacken the white hair
நரை முடி என்பது இப்போது டீன் ஏஜ் வயதிலேயே நிறைய பேருக்கு ஆரம்பமாகி விட்டது. அதை மறைக்க கெமிக்கல் கலந்த கலரிங் உபயோகிக்கின்றனர். இதனால் ஒன்றிரண்டு ஆங்காங்கே இருந்த நரை முடிகள் காலப்போக்கில் அதிக அளவு பெருகிவிடும் அபாயம் உள்ளது. ஒரு கட்டத்தில் தலைமுடிக்கு டை அடிக்காமல் இருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். இந்த பிரச்னைகளுக்கு எவ்வளவு டை அடித்தாலும் அது ரசாயனம் என்பதால், அதற்கு இயற்கை முறையில் தான் தீர்வு காண முடியும்.
நரைமுடியைத் தடுக்க (Control White Hair)
தற்பொழுது நரைமுடி வராமல் தடுக்கப் பற்பல வழிமுறைகள் உள்ளன. ஆனால் வந்தபின் எவ்வாறு நரைமுடியைக் கருமையாக மாற்ற முடியும் என தெரியுமா? அதற்கான, அருமையான பலனளிக்கும் எளிமையான வழி இதுதான். உருளைக்கிழங்கில் தேவையான விட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன. அது கூந்தலில் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். இதனால் நரை முடி மெல்ல மறைந்து, கருமையான கூந்தல் கிடைக்கும்.
2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உருளைக்கிழங்கு தோல் சிலவற்றை போட்டு வேகவிடவும். வெந்த பிறகு 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து பின் தண்ணீரை ஆறவிடவும். ஆறிய பின் அந்த நீரை வடிகட்டிக் கொண்டு, முதலில் தலைமுடியை நன்றாக சாதாரண நீரில் நனைக்கவும். பின் இந்த வடிகட்டிய நீரில் மெதுவாக ‘ஸ்கால்ப்பில்’ மசாஜ் செய்யவும். 5 நிமிடங்கள் இந்த வடிகட்டிய நீரில் கூந்தலை ஊறவிடவும். பின்னர் தலையை அலசவும். இது போல் வாரம் இரு முறை அல்லது மூன்று முறை செய்தால் சில வாரங்களிலேயே நரைமுடி மறைந்து கருமையான முடிகள் வளர ஆரம்பிக்கும்.
உங்களுக்கும் நரைமுடி இருந்தால், இதனை உடனே செய்து பாருங்கள். இயற்கை வழிமுறை என்பதால் நிச்சயம் நல்ல பலனைத் தரும்.
மேலும் படிக்க
ஆரோக்கியம் நிறைந்த பாதாம் பால் காஃபி, டீ!
குங்குமப்பூ தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Share your comments