சூரியனின் புற ஊதாக்கதிர்கள், நாள்பட்ட தழும்பு மற்றும் ஆர்செனிக் (வேதியியல் மூலம்) ஆகியவை சரும புற்றுநோயை (Skin Cancer) விளைவிக்கக் கூடும். இந்த சரும புற்றுநோய் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களை பாதிக்கிறது. பொதுவாக சரும புற்றுநோய்கள் மெலனோமா மற்றும் நான்-மெலனோமா என இருபெரும் வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை
சரும புற்றுநோய்க்கான பல்வேறு சிகிச்சைகளுள் அறுவை சிகிச்சையின் மூலம் அதை வெட்டி அகற்றுவதும் உள்ளடங்கும். இதில் அறுவை சிகிச்சையின் மூலம் நைவுப்புண் என்ற பாதிக்கப்பட்ட பகுதி அகற்றப்படுகிறது. தேவைப்படுமானால் சரும மடிப்பின் மூலமும் அந்த குறைபாடு மூடி மறைக்கப்படுகிறது. இதில் அறுவை சிகிச்சைக்குப் பதிலாக கதிர்வீச்சு சிகிச்சையானது (Radiation therapy) புற்றுநோய் பாதிப்புள்ள பகுதியில் புற்றுக்கட்டியை குணப்படுத்துவதற்காக தரப்படுகிறது.
சூரிய ஒளிக்கு நேரடியாக ஆட்படாமல் குறைப்பதன் வழியாக சரும புற்றுநோய்கள் வராமல் தடுக்க முடியும். சருமவியல் ரீதியாக பரிந்துரைக்கப்படுகிற சன் ஸ்கிரீன் கிரீம்களை (Sun Screen Cream) பயன்படுத்துமாறு எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கிற மருவில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது புதிய மருக்கள் தோன்றுமானால், புற்றுநோய்க்கான சாத்தியமின்மையை உறுதிசெய்ய ஒரு புற்றுநோயியல் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கவும். எவ்வளவு விரைவில் இது கண்டறியப்படுகிறதோ அந்தளவு அதனால் வரும் சிக்கல்களும் குறைவாக இருக்கும்.
நவீன தொழில்நுட்பம்
புற்றுநோய்க்கான சிகிச்சைகள் கடந்த பத்தாண்டுகளில் புதிய முறையியல்களை பின்பற்றுதல், நவீன தொழில்நுட்பம் (Modern Technolog) மற்றும் உயர் துல்லியம் ஆகிய அம்சங்களினால் அதிக வளர்ச்சி பெற்றிருக்கிறது. சரும புற்றுநோய்க்கு தரப்படும் சிகிச்சையில் வெற்றி விகிதம் என்பது 95% ஆக இருக்கிறது என்பது நம்பிக்கை தரும் செய்தி!
சரும புற்றுநோய் என்பது இந்தியாவில் அதிகம் வழக்கமில்லாத ஒரு புற்றுநோய் வகையாகும். ஆனாலும், பெண்கள் மத்தியில் 0.5 - 4.8% மற்றும்ஆண்கள் மத்தியில் 0.4 - 6.2% என்ற விகிதத்தில் காணப்படுகிறது.
மேலும் படிக்க
இந்த பழங்களை சாப்பிட்டால் வழுக்கையே வராதாம்!
மிதமான பாதிப்பை தரும் வாக்கிங் நிமோனியா: எளிய தடுப்பு முறைகள்!
Share your comments