எண்ணெய் வித்து தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் (sesame) மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் கால்சியம் சத்து (Calcium) அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் மிகச் சிறிய செடி வகையாகும். இதற்குத் திலம் என்றும் ஒரு பெயர் உண்டு. எள் விதைகளில் எண்ணெய் எடுக்கப்படுகின்றது. ஆனால் பொதுவாக இதை எள் எண்ணெய் என்று சொல்லாமல் நல்லெண்ணெய் என்றே அழைப்பர். எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும் போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியை தாங்கிக்கொள்ளும் சிறப்புத் தன்மை கொண்டது. பழங்காலத்திலும் சரி, இன்றும் கிராமப்புறங்களில் அநேக வீடுகளில் நல்லெண்ணெய் பயன்படுத்துவார்கள். இதற்கு காரணம் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும் குளிர்ச்சியையும் இந்த எண்ணெய் தரும்.
இதயத்திற்கு நல்லது
எள் விதை எண்ணெய் இதயத்தின் (Heart) ஆரோக்கியத்திற்கு உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் (Anti-Oxident) மற்றும் சீசேமோலின் (Sesamolin), அழற்சி எதிர்ப்பு பண்புகளான பெருந்தமனி குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
ரத்த சோகையைத் தடுக்கும்
இரும்புச் சத்தினால் ஏற்படும் ரத்த சோகை (Anemia) குறைபாட்டினை நீக்கும் தன்மை எள் விதையில் உள்ளது. வெள்ளை நிற எள்ளை விட கருப்பு நிற எள்ளில் அதிக இரும்புச் சத்து உள்ளதால் ரத்த சோகையை தடுத்து இரும்புச் சத்துக்களை உடலுக்கு அதிக அளவில் தருகின்றது.
ஆற்றல் தரும்
எள்ளில் புரதச் சத்து (Protein) அதிகம் உள்ளது. உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் உடலில் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.
எள்ளின் பயன்கள்:
- சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
- எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது
- எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது
- கொழுப்பின் அளவை குறைக்கிறது
- ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
Share your comments