அனைவரும் இயல்பாகவே நமது வேளைக்கான உணவு பரிமாறப்படும் போது இனிப்பு வைக்கப்பட்டால் உணவு உண்டு முடித்த பின்புதான் அந்த இனிப்பைச் சாப்பிடுகிறோம். ஆனால் உண்மையில் உணவுக்கு முன்னரே இனிப்பைச் சாப்பிட வேண்டும். ஏன் முன்னரே சாப்பிட வேண்டும் என ஆய்ர்வேதம் தரும் விளக்கத்தை இப்பதிவு விளக்குகிறது.
சாப்பாடு உண்டு முடிந்தது; இப்போது இனிப்பான ஒன்றுக்கான நேரம்! இது ஒரு பொதுவான உணவுப் பழக்கம் தான். இந்த முறையைப் பல நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் பலர் பின்பற்றுகிறார்கள். ஆடம்பரமான உணவு உண்ணும் உணவகங்களில் கொடுக்கப்படும் உணவுகள் கூட ஸ்டார்டர்கள் அல்லது சூப்களுடன் தொடங்கி இனிப்புகளில் முடிகிறது. இருப்பினும், ஆயுர்வேதம் இந்த செய்கையை வேறுபடும்படிக் கூறுகிறது. ஊட்டச்சத்துக்கள் மற்றும் செரிமானத்தை சிறப்பாகச் செயல்பட உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று பண்டைய இந்திய அறிவியல் வெளிப்படுத்துகிறது என்பதும் கூடுதல் தகவல்.
ஆயுர்வேதத்தின்படி, இனிப்புகளை உண்ணும் நேரம் மற்றும் உணவின் போது பின் இனிப்பை உண்ணும் நிலை ஆகியவை நச்சுத்தன்மை மேம்படுத்துகிறது. எனவே, என்ன சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதும், உணவுப் பழக்கவழக்கங்களை உன்னிப்பாகக் கவனிப்பதும் அவசியம் ஒன்றாக இருக்கிறது.
ஆரோக்கியம், உயிர்ச்சக்தி மற்றும் ஆற்றல் நிலைகளை அதிகரிக்க உணவில் இனிப்புகளை எவ்வாறு இணைப்பது என்று யோசிக்கிறீர்களா? அவ்வாறு செய்வதற்கு ஆறு நல்ல காரணங்கள் கீழே கொடுக்கப்படுகிறது.
- உணவுக்கு முன் இனிப்புகளை சாப்பிடுவது சுவை மேலும் நன்கு உணர வைப்பதாக அறியப்படுகிறது
- இனிப்புகளில் அதிக கலோரிகள் இருப்பதால் அவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே உணவுக்கு முன்னரே இனிப்பைச் சாப்பிட வேண்டும்.
- உணவுக்கு முன் இனிப்புகளைச் சாப்பிடுவது உடலில் செரிமான ஹார்மோன்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது
- உணவுக்குப் பிறகு இனிப்புகளை உட்கொள்வது சாதாரண செரிமான செயல்முறையைத் தடுக்கலாம். அதோடு, அஜீரணத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.
- உணவுக்குப் பிறகு இனிப்புகளைச் சாப்பிடுவது என்பது உடலில் வாயு மற்றும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும்
- ஆயுர்வேதம் உணவுக்கு முன் இனிப்புகளைச் சாப்பிட பரிந்துரைக்கும் அதே வேளையில், குறைந்த மற்றும் பாதுகாப்பான அளவுகளில் விருந்தை அனுபவிப்பது இன்றியமையாதது ஆகும்.
- இனிப்பை உள் எடுத்துக் கொள்ளும் போது ஒரு டீஸ்பூன் மட்டுமே நல்லது.
- ஏனெனில் இது இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் கலோரி நுகர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இறுதியாக, உணவுக்கு முன் இனிப்பை எடுத்துக் கொண்டு அதன் பின் உணவை உண்பது உடலுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. சரியான உணவுப் பழக்கங்களைப் பின் பற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க
Share your comments