நம் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க நாம் அனைவரும் கடுமையாக உழைத்து வருகிறது, ஒவ்வொரு நாளும் நம் அனைவருக்கும் நல்லது என்று ஒன்றை சாப்பிடுகிறோம். அந்த வகையில் தான் சத்தான உணவாக கருதப்படும் பாதாம் கொட்டைகளை அதிக அளவில் உட்கொள்கிறோம்.
பாதாம் கொட்டைகளில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஈ, ஃபைபர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிரைந்துள்ளன, இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு அதிகமாக சாப்பிட்டால் அது உடல்நல பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும். சில சுகாதார நிலையில் பாதாம் கொட்டைகளை நாம் உண்ண கூடாது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
யாரெல்லாம் பாதாம் கொட்டைகளை தவிர்க்க வேண்டும்(Anyone should avoid almonds)
- உயர் இரத்த அழுத்தம்(High Blood Pressure) உள்ளவர்கள் பாதாம் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது.
- சிறுநீரக கற்கள் அல்லது பித்தப்பை நோய் பாதிப்பு உள்ளவர்களும் பாதாம் பருப்பை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
- பாதாம் பருப்பில் நிறைய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்திற்கு நல்லது. அதே நேரத்தில், பாதாம் அளவுக்கு அதிகமாக உட்கொண்ட பிறகு செரிமான பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
- பாதாமில் அதிக அளவு வைட்டமின் E காணப்படுகிறது, இதன் காரணமாக அதிகப்படியான அளவு தலைவலி, சோர்வு உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
மேலும் படிக்க:
Share your comments