குளிர்காலத்தில் இருமல்-சளி பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் இந்த நோய்களை எதிர்த்துப் போராடும் பல மூலிகைகள் நம் வீட்டிலேயே உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சளி மற்றும் இருமல் முதலானவைகளை போக்கும் எளிய வழிகளை இப்பதிவில் பார்க்கலாம்.
அதிகமாகச் சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் மூன்று வேளை சாப்பிட்டு வர சரியாகும். கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும் எனக் கூறப்படுகிறது.
கல்யாணமுருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வந்தால் சளி குணமாகும்.துளசி இலைகளை சாப்பிடுவதால் பல நோய்கள் குணமாகிவிடும். இது ஆஸ்துமா, சளி, இருமல் மற்றும் காய்ச்சலில் நிவாரணம் தரும் எனக் கூறப்படுகிறது.
மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் சரியாகும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் சரியாகும்.
ரோஸ்மேரி நறுமணத்தினைப் பரப்புவதோடு, நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகின்றது. ரோஸ்மேரி இலைகளை சுவாசிப்பதன் வழியாக, அடைபட்ட மூக்கு திறக்கிறது. இது தலைவலிக்கு நிவாரணம் தருகிறது.
பூண்டில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஆகியன உள்ளன. ஆகவே இவை தொற்று நோய்களைக் குணப்படுத்த உதவும். பூண்டை சாப்பிடுவது சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் தருகிறது.
இலவங்கப்பட்டை உடலினைச் சூடாக வைத்திருக்க உதவுகிறது. சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களில் இலவங்கப்பட்டையின் கஷாயத்தை உட்கொள்வது மிகவும் நன்மையைத் தருவதாக இருக்கும்.
மேலும் படிக்க
Covid: கபசுர குடிநீரை வாங்க தமிழகத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!
Share your comments