பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழியின் முட்டையைக் கொண்டு ஆஃப் பாயில் செய்து சாப்பிட்டால், பறவைக்காய்ச்சல் பரவக்கூடிய ஆபத்து உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவிவரும் பறவை காய்ச்சல் கேரளாவில் வாத்து மற்றும் கோழிகளை தாக்கியுள்ளது.
எனவே நோய் தாக்கப்பட்ட பறவை இனங்களை அதிகாரிகள் தீ வைத்து அழித்து வருகின்றனர்.
3 பாதைகள் (3 Routes)
கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி ஆகிய 3 பாதைகளில் வாகனங்கள் இயங்குகின்றன. தற்போது குமுளி மலைச்சாலையில் சாலைப்பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கம்பம் மெட்டு, போடி மெட்டு மலைப்பாதைகளில் மட்டும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பறவை காய்ச்சலைத் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்பு மாவட்ட ஆட்சியர்ர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
அதில், கேரள மாநிலத்தில் இருந்து எந்த பொருட்களையும் தமிழகத்துக்கு கொண்டு வரக்கூடாது.தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.நோய்க்கு தேவையான மருந்துகளை தேவையான அளவில் வைத்திருக்க வேண்டும். நீர் பறவைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
சாதாரணமாக இந்த வைரஸ் கிருமி மனிதர்களை தாக்குவதில்லை என்ற போதும் சில நேரங்களில் நோய் பாதித்த பறவைகளை சாப்பிடும்போது நோய் பரவும் ஆபத்து உள்ளது.
எனவே உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொது சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆஃப் பாயில்டு (Half boil)
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சுகாதாரத்துறைஅதிகாரிகள், கோழி இறைச்சியை அரை வேக்காடாக சாப்பிடுவதையும், கோழி முட்டையை ஆஃப் பாயிலாக (half Boil)சாப்பிடும்போதும் நோய் பரவக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் படிக்க...
மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!
பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!
ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!
Share your comments