மனிதனுக்கு ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அந்த நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க, பல 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கின்றன. அதில், 'ஆரோக்கியா.ஏஐ'(AarogyaAI) என்ற கம்பெனியும் ஒன்று. எய்ட்ஸ் நோய் தான் உலகில் மோசமான நோய். இதனால், அதிக எண்ணிக்கையில் இறக்கின்றனர் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறோம். எய்ட்ஸ் நோயை விட காச நோய் ஒவ்வொரு ஆண்டும் அதிக உயிர்களை கொல்கிறது.ஒவ்வொரு ஆண்டும், 'கோவிட்-19'க்கு பின், கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களுக்கு அதிகமாக காசநோயால் இறக்கின்றனர்.
காசநோய் (Tuberculosis)
தற்போது, இந்த தொற்று நோய்க்கான சிகிச்சையானது நீடித்த மற்றும் வலி மிகுந்ததாகவே உள்ளது. சிக்கலான மருந்துகளை உட்கொள்வதால், இந்த நீண்ட கால வலி மிகுந்த சிகிச்சை பல ஆண்டாக மாறவில்லை. இது நோயாளிகளுக்கு ஒரு பெரிய உடல், மன மற்றும் பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது. காசநோய்க்கு எதிரான, 19 மருந்துகளில், எவை யாருக்கு வேலை செய்யும் என்பது மருத்துவர்களால் உடனடியாக கூற முடியாது. எனவே, காசநோய் குணப்படுத்தக்கூடியதாக இருந்தாலும், மருந்து -எதிர்ப்பு காசநோய் தாமதமாக கண்டறியப்பட்டால், நோயாளிகள் ஏழு ஆண்டுகள் வரை பயனற்ற மருந்துகளை உட்கொள்வதை குறைக்கலாம்.
ஸ்டார்ட் அப் (Start up)
தற்போது, மருந்து -எதிர்ப்பு காசநோயை விரைவாகவும், விரிவாகவும் கண்டறிய எந்த கருவிகளும் இல்லை. 'AarogyaAI' நிறுவனம் மருந்து- எதிர்ப்பு காசநோயை சில மணி நேரங்களில் கண்டறிவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதனால் ஒரு நோயாளிக்கு பயனுள்ள சிகிச்சையை உடனடியாக மருத்துவரால் பரிந்துரைக்க முடியும். ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்புக்கான துல்லியமான நோயறிதலை வழங்க, செயற்கை நுண்ணறிவுடன் (artificial intelligence) மரபணுவியலின் நன்மைகளை இணைப்பதன் மூலம் உயிர்களை காப்பாற்றுவதாகும். இந்த, 'ஸ்டார்ட் அப்' கண்டுபிடித்திருக்கும் ஒரு SaaS (Sofrware As A Service) இயங்கு தளம் பாக்டீரியாவிலிருந்து வரும் 'டிஎன்ஏ' வரிசை, நோயாளியை பாதிக்கும் மரபணு வரிசை என்றும் அறிகிறது.
இது, 'மெஷின் லேர்னிங்' வழிமுறையை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்படுகிறது. நோயாளியின் விரிவான மருந்து உணர்திறன் நிலையை காட்டும் அறிக்கையை உருவாக்க செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நோயாளிக்கு வேலை செய்யும் மற்றும் செய்யாத மருந்துகளின் பட்டியல் மற்றும் அவற்றின் சேர்க்கைகளை உள்ளடக்கிய அறிக்கையை கொடுக்கிறது. இந்த அறிக்கையை, நுண்ணுயிர் எதிர்ப்புகளின் மிகவும் சக்தி வாய்ந்த கலவையை பரிந்துரைக்க மருத்துவர்களால் பயன்படுத்தலாம்.
இது சிகிச்சையின் காலத்தை மிகவும் குறைக்கிறது.இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியின் மென்பொருள் உள்நாட்டில் சரிபார்க்கப்பட்டது மற்றும் அதன் வெளிப்புற சரிபார்ப்பு மற்றும் பைலட் சோதனை நிலையை தற்போது அடைந்துள்ளது. இந்தாண்டு வணிக பயன்பாட்டுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.அது பல கோடி காசநோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என நம்பலாம்.
இணையதளம்: www.aarogya.ai
சந்தேகங்களுக்கு இ-மெயில்sethuraman.sathappan@gmail.com.
அலைபேசி: 098204 51259
இணையதளம் www.startupandbusinessnews.com
மேலும் படிக்க
சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் டி5 சூரணம்: சித்த மருத்துவர்கள் அசத்தல்!
புகையிலை பொருட்களின் மீது புதிய எச்சரிக்கும் வாசகம்: மத்திய அரசு அதிரடி!
Share your comments