இரைப்பை புற்றுநோய் எனப்படும் வயிற்றுப் புற்றுநோய், வயிற்றின் உள் பகுதியையும் பாதிக்கும். இது வயிற்றுப் புறணியில் உள்ள புற்றுநோய் செல்களின் அசாதாரண வளர்ச்சியாகும். வயிற்றின் ஆரோக்கியமான செல்கள் தனது தன்மையில் மாறி, கட்டுப்பாட்டை மீறி வளரத் தொடங்கும் போது, அது இரைப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும். வயிற்றுப் புற்றுநோய் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? என்பதைக் குறித்துதான் இப்பகுதி விளக்குகிறது.
இது வயிற்றின் எந்தப் பகுதியிலும் தொடங்கி கல்லீரல், நுரையீரல் மற்றும் எலும்புகள் போன்ற உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவலாம். வயிற்றுப் புற்றுநோய்கள் பல ஆண்டுகளாக சிறிது சிறிதாக வளரும் தன்மை கொண்டது.
வயிற்று புற்றுநோயின் வகைகள்
அடினோகார்சினோமாஸ் (Adenocarcinomas):இது மிகவும் பொதுவான வகை வயிற்றுப் புற்றுநோயாகும். மேலும் இது வயிற்றின் உள்புறத்தில் உள்ள சுரப்பி செல்களில் இருந்து உருவாகிறது, இது மியூகோசா என அழைக்கப்படுகிறது.
இரைப்பை குடல் ஸ்ட்ரோமல் கட்டிகள் (Gastrointestinal stromal tumors (GISTs): இந்த வகை புற்று நோய் வயிற்றின் சுவர்களில் இருந்து தொடங்கி, பின்னர் உடலின் மற்ற பகுதிகளில் கட்டிகளைப் பரப்புவதன் மூலம் வளர்கிறது. GIST-ஆனது உடலின் செரிமான பாதையில் எங்கும் வேண்டுமானாலும் தொடங்க வாய்ப்பு இருக்கின்றது. இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது வயிற்றிலிருந்து ஆரம்பமாகத் தொடங்குகிறது.
லிம்போமாக்கள் (Lymphomas): லிம்போமாஸ் லிம்போசைட்டுகளில் தொடங்குகிறது. லிம்போமாஸ் பொதுவாக உடலின் மற்ற பகுதிகளில் தொடங்குகிறது. ஆனால், சில சந்தர்ப்பங்களில் இது வயிற்றில் தொடங்கும் என்றும் அறியப்படுகிறது.
வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்பம் என்பது, வயிற்று திசுக்களை உருவாக்கக்கூடிய உயிரணுக்களின் டிஎன்ஏவில் மாற்றங்கள் ஏற்படுத்தும். இந்த செல்கள் சிறிது சிறிதாக ஒன்றாகச் சேர்ந்து கட்டிகளை உருவாக்குகின்றன. அதே நேரத்தில், இவை உடலின் அனைத்து ஆரோக்கியமான செல்களையும் கொல்லும் தன்மை உடையது. இந்நிலை அடுத்தடுத்து மற்ற உறுப்புகளுக்கும் பரவலாம்.
வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள்:
நெஞ்செரிச்சல்
குமட்டல்
பசியிழப்பு
அஜீரணம்
வயிற்று வலி
மலத்தில் இரத்தம்
குறிப்பிடத்தக்க எடை இழப்பு
உணவு விழுங்குவதில் சிரமம்
வயிற்று பகுதியில் வீக்கம்
மஞ்சள் நிறக் கண்கள்
வாந்தி
வயிற்றுப் புற்றுநோயை கண்டறிய உதவும் சோதனைகள்:
மேல் எண்டோஸ்கோபி (An upper endoscopy): நுனியில் கேமராவைக் கொண்ட ஒரு சிறிய குழாய் புற்றுநோயின் அறிகுறிகளைக் காண தொண்டை மற்றும் வயிற்றுக்குள் அனுப்பப்படுகிறது.
பயாப்ஸி (Biopsy): வயிற்றில் இருந்து திசுக்களின் சிறிய மாதிரி எடுக்கப்பட்டு, ஏதேனும் அசாதாரண உயிரணு வளர்ச்சி சரிபார்க்கப்படுகிறது.
இமேஜிங் சோதனைகள் (Imaging tests): வயிற்றுப் புற்றுநோயைக் கண்டறிய CT ஸ்கேன் மற்றும் பேரியம் எக்ஸ்ரே நடத்தப்படுகிறது.
எந்த சிகிச்சை உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டறிய புற்றுநோயின் அளவைத் தீர்மானிப்பது அவசியமாகும். அதோடு இரத்தப் பரிசோதனையும் அவசியம் ஆகும். இந்த இரத்தப் பரிசோதனைகள் உறுப்புகளின் செயல்பாட்டை அளவிடுவதோடு வேறு, எந்த உறுப்புகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியப் பயன்படுகிறது.
மேற்கண்ட வற்றில் ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும், அப்போதுதான் சரியான நேரத்தில் தேவையான சோதனைகளை நடத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுதல் அவசியமாகும்.
மேலும் படிக்க
Share your comments