கோடைகாலம் ஆரம்பித்து விட்டது. சுட்டெரிக்கும் சூரியனும் கொளுத்தும் வெய்யிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது . வெயிலில் ஏற்படும் வியர்வையினால் உடலில் உள்ள நீர் குறைகிறது, இதனால் உடல் பலம் குறைந்து சோர்வும் மயக்கமும் ஏற்படுகிறது. இந்நிலையில் உடலில் உள்ள நீர் சத்தை அதிகரிக்க குளிர் பணம் மற்றும் ஐஸ்கிரீம் தவிர உடலுக்கு மேலும் பல ஆரோக்கியமானதையும்,சத்தானதையும் உட்கொள்ளலாம்.
மோர்:மோர் வெயிலில் அமிர்தமாக கருதப்படுகிறது. மோர் உடலில் குளுமையை ஏற்படுத்தி உடல் வெப்பத்தை தணிக்கிறது. இதில் வைட்டமின் பி, பொட்டாசியம், ப்ரோடீன் நிறைந்துள்ளது. மோர் குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்பு பெறுகிறது, மற்றும் மோர் செரிமானத்தை சரி செய்கிறது.
தர்பூசணி:தர்பூசணியில் 92 சதவீதம் நீர் சத்து இருக்கும். இது உடலில் உள்ள நீர் சத்து குறைவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி, பி,பி 2 ,பி 3 உள்ளது மற்றும் நீர் அதிகமாக உள்ளது.
இளநீர்:இளநீர் வெயிலுக்கு மிக சிறந்தது.சாதாரணமாக ஒரு தேங்காயில் 200 முதல் 250 மிலி லிட்டர் தண்ணீர் உள்ளது.இது கொழுப்பு சக்தி குறைந்ததாகவும் மற்றும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.உடலுக்கு மிக சத்தானது, உடலுக்கு குளிர்ச்சியும் , புத்துணர்ச்சியையும் தரக்கூடியதாகும். மேலும் இது உடலில் உள்ள உப்பின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
எலுமிச்சை சாறு:இது ப்ரோடீன், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், மற்றும் மினரல்ஸ் ஆகிய வற்றால் நிறைந்துள்ளது. வெயிலில் முகம் வாடுவதை தவிர்த்து புத்துணர்ச்சி அளிக்கும். உடல் சூட்டால் ஏற்படும் முகப்பருக்களை தடுக்க உதவும். மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது.
மாம்பழம்:வெயில் காலத்தில் மாம்பழம் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஆரோக்கியமானதாகும்.வெயிலில் மாம்பழம் உண்பதை குழந்தைகளும் பெண்களும் பெரிதும் விரும்புவார்கள். மாம்பழத்தின் நுகர்வு காரணமாக, செரிமானம் சரியானது.
Share your comments