முசுமுசுக்கை என்பது கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டு செயல்பட்டுள்ளது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை முழுவதுமாக அகற்றி நல்லதொரு தீர்வாக அமைகின்றது.
முசுமுசுக்கை கீரையானது, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது ஆகும். சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, முதலியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையதாக அமைகிறது.
முசுமுசுக்கை இலையின் பலன்கள்:
- முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி, அதன் பின் அதனைப் பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டால் ஆஸ்துமா, மூச்சுதிணறல் ஆகியன குணமாகும்.
- முசுமுசுக்கை இலையினைத் தைலமாக வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு குறையும். அதோடு, கண் எரிச்சல் போகும்.
- முசுமுசுக்கையைச் சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் முதலியன குணமடையும்.
- முசுமுசுக்கை, பரட்டைக் கீரை , தூதுவளை ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு பிரச்சனை குறையும்.
- முசுமுசுக்கை பொடியைத் தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் பிரச்சனை குணமாகும்.
இக்கீரையினை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு உண்ணலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொண்டால் நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
தென்காசி விவசாயிகளே! இலவசமாக வண்டல், கரம்பை மண் வேண்டுமா?
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே 8ஆம் தேதி அன்பில் மகேஷ் அறிவிக்கிறார்
Share your comments