இதனை வாரம் ஒருமுறை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. வாழைத்தண்டு சிறுநீரக கற்களை கரைக்கும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் ஆகும். அதுமட்டுமல்லாது ஜீரண சக்தியை அதிகரிக்கவும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தவும் வாழைத்தண்டு உதவுகிறது.
வாழைத்தண்டின் பயன்கள் (The benefits of banana stalks)
வாழைத்தண்டில் உள்ள வைட்டமின் பி6 சத்து, இரும்புசத்து போன்றவற்றால் இரத்தத்தின் ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பணு அளவு அதிகரிக்கும்.
உடலின் நோயெதிர்ப்பு சக்தி கூடும். வாழைத்தண்டை அரைத்து பற்று போல வயிற்றில் இட்டு வந்தால், சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் வலி குணமாகும்.
இதில் உள்ள பொட்டாசியம் சத்து இதயத்திற்கு கேடு விளைவிக்கும் உப்பின் அளவை குறைக்கும்.
தினமும் 25 மி.லி அளவில் உள்ள வாழைத்தண்டு சாறு குடித்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகும்.
தொண்டை வீக்கம், வறட்டு இருமல் குணமாகும். குடலில் தங்கியிருக்கும் முடி மற்றும் நஞ்சு போன்றவற்றையும் வாழைத்தண்டு சாறு வெளியேற்றும்
மேலும் படிக்க
Share your comments