உயர் இரத்த அழுத்தம் தற்போது ஆண் பெண் என இருபாலருக்கும் ஏற்படும் நோயாகி விட்டது. ஆண்களை காட்டிலும் பெண்களின் ரத்த நாளங்கள் விரைவாக முதுமை தன்மையை அடைவதாக கூறுகிறது ஆய்வுகள். அதாவது, மிகக் குறைந்த வயதிலேயே பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வரும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்றும் கூறுகின்றனர்.
இரத்த அழுத்தம் (Blood Pressure)
ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரத்த அழுத்த மாதிரிகளை வைத்து, 43 ஆண்டுகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் 53 சதவீதம் பெண்களின் ரத்த அழுத்த அளவீடுகள்.
பெண்களுக்கு 20 வயதில் இருந்தே, வெளியில் தெரியாமல், படிப்படியாக ரத்த அழுத்தம் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. இதயம் தொடர்பான பிரச்னைகள், பக்கவாதம், இதய செயலிழப்பு, மாரடைப்பு போன்ற பல்வேறு கோளாறுகளுக்கும் வலுவான அடிப்படை காரணம் உயர் ரத்த அழுத்தம்.
இதற்கு மரபியல், உடல், மன செயல்பாடுகள் காரணமாக இருக்கலாம். உயர் ரத்த அழுத்தம் உள்ள 30 வயது ஆண்களை விட, பெண்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
மேலும் படிக்க
குடியால் வரும் விளைவு: மூளையின் அளவு குறைய வாய்ப்பு!
தினமும் 25 கிராம் வெந்தயம் போதும்: இந்த நோயைக் கட்டுப்படுத்த!
Share your comments