1. வாழ்வும் நலமும்

செவ்வாழையின் அற்புதப் பலன்களை எடுத்துரைக்கும் சித்த மருத்துவர்!

KJ Staff
KJ Staff
Benefits of Red Banana
Credit : Newstm

அங்கொன்றும் இங்கொன்றுமாய் அத்தி பூத்தாற் போல காணப்பட்ட செவ்வாழைகள், இப்போது திரும்பிய இடமெங்கும் விற்பனையாகின்றன. மக்களும் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர். ஏனென்றால், இப்பழத்தினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இந்தச் செவ்வாழையின் (Red Banana) நன்மைகள் பற்றிச் சொல்கிறார் சிதம்பரம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் எம்.எம்.அர்ஜுனன்.

நன்மைகள்:

  • தொற்று நோய் கிருமிககிருமிகளைக் கொல்லும் சக்தி செவ்வாழைக்கு உண்டு.
  • செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.
  • செவ்வாழையில் பொட்டாசியம் (Potassium) சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆண்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. 50 சதவீதம் நார்ச்சத்து (Fiber) காணப்படுகிறது.
  • நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் இரவு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வர வேண்டும்.
  • தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
  • இரத்த மண்டலத்திற்கும் ஆண்மைக்கான ஊட்டச் சத்திற்கும் தேவையான வேதிப்பொருட்கள் செவ்வாழைப் பழத்தில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • குழந்தை இல்லாத தம்பதியினர் 40 நாட்கள் தொடர்ந்து செவ்வாழைப் பழத்துடன் அரை ஸ்பூன் தேனும் (Honey) எடுத்து வரலாம்.
  • பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப் பழம் குணமாக்கும்.
  • தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர, ஈறுகள் வலுப்பெற்று ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
  • நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செவ்வாழைப் பழம் மலச்சிக்கலைத் தீர்க்கும்.
  • மூல நோய் கூட கட்டுப்படும்.
  • எந்த ஒரு பழத்தையும் சமைத்த உணவோடு சேர்த்துச் சாப்பிடாமல், அது நன்கு செரித்த பின், தனியே சாப்பிட இலகுவாய் செரிக்கும். அதன் சத்து உடலில் சேரும். இந்த அடிப்படை செவ்வாழைக்கும் பொருந்தும். இதை உணர்ந்து சாப்பிட, இதன் பலன் நமக்கு கிட்டும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

சர்க்கரை நோயைத் தவிர்க்க பழம் தான் பெஸ்ட்! பழச்சாறு அருந்த வேண்டாம்!

கீரை முதல் கேரட் வரையிலான, விட்டமின் உணவுகளை சாப்பிடத் தகுந்த நேரம்!

English Summary: The Siddha doctor who explains the amazing benefits of Red Banana! Published on: 13 April 2021, 01:21 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.