1. வாழ்வும் நலமும்

இவை உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் மூளை செயலிழக்கும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
- eating too often can cause brain damage!

நம் உடலின் அனைத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்துவது மூளைதான். ஆக உடல் இயக்கத்திற்கு மூளையின் கட்டளை மிக மிக முக்கியம். மூளை மட்டும் கட்டளையிட மறுத்தால், உடலின் இயக்கமே பூஜ்ஜியமாகத் தான் இருக்கும். நாம் எவ்வளவுதான் அறிவுறுத்தினாலும், உடல் ஒத்துழைக்காது. இந்தப் பிரச்னையை அனுபவித்தவரால் மட்டுமே, இதன் வீரியத்தை உணர்த்த முடியும்.

எனவே மூளையைப் பராமரிக்க வேண்டியது மிக மிக அவசியம். அவ்வாறு, மூளையின் செயல்பாடுகளை முடக்கும் உணவுகள் என சில உணவுகள் உள்ளன. எனவே அவற்றைத் தெரிந்துகொண்டு, அதன் பக்கம் போகாதவரை நாம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைக்க முடியும்.
எவை அந்த உணவுகள்? தெரிந்துகொள்வோமா?

அதாவதுக் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடுவதால், அவை மூளையின் செயல் திறன் மிகவும் பாதிப்பதோடு, ஞாபக மறதி மற்றும் மூளை வீக்கம் போன்றவை ஏற்படும் ஆபத்துக்களையும் அதிகரிக்கின்றன. மேலும், அல்சைமர் (Alzheimer) மற்றும் டிமென்ஷியா போன்ற மன நோய்களின் ஆபத்தையும் அதிகரிக்கும். அந்த உணவுகளின் பட்டியல் இதோ!

கிளைசெமிக் குறியீடு உணவுகள்

அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன. பிரெட் மற்றும் பாஸ்தா போன்றவை சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளின் வகையின் கீழ் வருகின்றன. இவற்றை உண்ணாதீர்கள். இவை எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் ஆபத்துக் கொண்டவை.

நைட்ரேட் உணவு

அதிக நைட்ரேட் உள்ள உணவு மனநலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சேதப்படுத்துகிறது. உணவிற்கு நிறத்தை கொடுக்க இது பயன்படுகிறது. சலாமி, சாசேஜ் மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பொரித்த உணவு

பொதுவாக எண்ணெய்யில் பொரித்த உணவுகள் நம் அறிவாற்றல், ஆரோக்கியம் என இரண்டையும் பாதிக்கிறது. ஒரு ஆய்வின் படி, பொரித்த பொருட்களை அதிகமாக சாப்பிடுபவர்களது நினைவாற்றல் பலவீனமடையத் தொடங்குகிறது. இவற்றை உட்கொள்வதால் இரத்த நாளங்களில் வீக்கம் ஏற்படுகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதும் மனச்சோர்வின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

சர்க்கரை பொருட்கள்

சர்க்கரைப் பொருட்களை உடல் குளுக்கோஸாக மாற்றுகிறது. இது ஆற்றலை அளிக்கிறது. ஆனால் சர்க்கரையை அதிகமாக உட்கொள்ளும் போது, ​​அது மூளையின் செயல்பாடு, நினைவாற்றல் ஆகியவற்றை பாதிக்கிறது. செயற்கை சர்க்கரையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிடுவது உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கிறது.

மது

மது அருந்துவதால் டிமென்ஷியா ஏற்படுகிறது. இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட  ஆராய்ச்சி ஒன்றில், மது அருந்துபவர்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

அனைத்து சருமப் பிரச்னைக்கும் இந்த ஒரு Skin doctor போதும்!

உடல் எடையைக் குறைக்க உதவும் ராகி!

English Summary: These are dangerous foods - eating too often can cause brain damage! Published on: 09 March 2022, 11:50 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.