மாம்பழம் சீசன் தொடங்கிவிட்ட நிலையில் பலரும் மாம்பழங்களை வாங்கி உண்பதில் ஆர்வம் காட்டி வருவீங்க. ஆனால் அதே சமயத்தில் மாம்பழம் சாப்பிடுவது சிலருக்கு உடல் உபாதை பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனவே மாம்பழம் சாப்பிடுவதற்கு எத்தகைய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
ஒவ்வாமை:
சிலருக்கு மாம்பழங்கள் உண்பதில் ஒவ்வாமை இருக்கலாம். மாம்பழத்தினை உட்கொண்ட பிறகு அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற பாதகமான எதிர்விளைவுகள் ஏற்பட்டால், மாம்பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உங்களது உடல்நலன் குறித்து உரிய மருத்துவரிடம் கலந்தாலோசித்து ஆலோசனையைப் பெறுவது நல்லது.
பூச்சிக்கொல்லிகள்:
பல பழங்களைப் போலவே, மாம்பழங்களையும் பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்க பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்து சில வியாபாரிகள் விற்க முயலலாம். முடிந்தால், இயற்கையாக விளைந்த மாம்பழங்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெற்று உண்ணலாம். அப்படி இயலாத பட்சத்தில் மாம்பழத்தை ஓடும் நீரின் கீழ் நன்கு கழுவி, தோலை உரித்து பின்னர் உண்ணலாம். ஏனெனில் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் வெளிப்புற மேற்பரப்பில் படிந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.
பழுத்த மற்றும் புத்துணர்ச்சி பழங்கள்:
பழுத்த மாம்பழங்களை உண்ண தேர்ந்தெடுக்கும் போது தொடுவதற்கு சற்று மென்மையாகவும், இனிமையான நறுமணத்துடன் இருக்கும் வகையில் இருப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். சிராய்ப்பு அல்லது சேதமடைந்த தோலைக் கொண்ட மாம்பழங்களை முடிந்த அளவு தவிர்க்கவும். ஏனெனில் அவை கெட்டுப்போன அல்லது பூஞ்சையைக் குறிக்கலாம்.
நார்ச்சத்து மற்றும் செரிமானம்:
மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்திற்கு நன்மை பயக்கும். இருப்பினும், அதிக அளவு நார்ச்சத்து உட்கொள்வது, குறிப்பாக உங்கள் உடல்நிலையில் தொந்தரவு செய்யவும் வாய்ப்புள்ளது. உடல் பாகங்களில் வீக்கம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம். எனவே முதலில் மாம்பழங்களை சிறிதளவு உட்கொண்டு பாருங்கள். தொந்தரவு எதுவும் இல்லாத நிலையில் படிப்படியாக உங்கள் உட்கொள்ளலை அதிகரிக்கவும்.
மாம்பழ கொட்டை:
மாம்பழங்களின் மையத்தில் பெரிய, தட்டையான கொட்டை உள்ளது, அதை சாப்பிடும் போது தவிர்க்க வேண்டும். இது பொதுவாகவே உண்பதற்கு ஏற்றதல்ல. மேற்கொண்டு உண்ணும் பட்சத்தில் உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.
இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் பழங்களில் ஒன்று மாம்பழம். தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் தென் மாநிலங்கள் நாட்டிலேயே மாம்பழம் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். தமிழகம் முழுவதும் பலவிதமான மாம்பழங்கள் விளைகின்றன. இனிப்பு சுவையும், பழரசமும் நிறைந்த அல்போன்சா மாம்பழத்தில் இருந்து சிறிய ஆனால் சுவையான செந்தூர மாம்பழம் வரை, தமிழ்நாட்டில் மாம்பழம் விளைவிக்கப்படுகிறது.
எல்லா விஷயத்திலும் ஆசைக்கு ஏற்றவாறு கவனமும் இருப்பது அவசியம். எனவே மாம்பழங்களை உண்பதற்கு முன் மேற்குறிப்பிட்ட விஷயங்களை ஒருமுறை கவனத்தில் கொள்ளுங்கள்.
pic courtesy: unplash
மேலும் காண்க:
சூரிய சக்தியில் விவசாய பணிக்காக வாகனம்- 11 ஆம் வகுப்பு மாணவி சாதனை
Share your comments