இன்றைய காலகட்டத்தில்,தூக்கமின்மை என்பது பொதுவான பிரச்சனை. தூக்கமின்மை என்பது குறிப்பாக இளைஞர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை.இரவு முழுவதும் விழித்திருந்து, பகல் முழுவதும் தூங்கும் பழக்கத்தை கடைபிடித்துள்ளார்கள். இதனால், உடலின் ஒட்டுமொத்த செயல்பாடு, செயல்திறன் மற்றும் வாழ்க்கை தரம் பெரிய அளவில் பாதிக்கக்கூடும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.
நன்றாக உறங்க மெக்னீசியம் சத்து உதவுகிறது.ஏனென்றால் மெக்னீசியம் சத்து மன அழுத்தத்தை போக்க உதவுகிறது. இதனால் நன்றாக தூங்கலாம். பூசணி விதைகள், கீரை, வேர்க்கடலை,பாதாம், போன்ற உணவுகளில் மெக்னீசியம் அதிகம் காணப்படுகிறது.
உடற்பயிற்சியும் தூக்கமின்மையை போக்க மிகவும் சிறந்ததாக உள்ளது, ஏனென்றால், உடல் பயிற்சியில், உடல் களைத்து போய் , நல்ல தூக்கத்தை கொடுக்கிறது.
மனதிற்கு இதமான ஒன்று நறுமணம். குறிப்பாக சந்தனம் நறுமணம் மன அழுத்தத்தை போக்கி, தூக்கத்தை வரவழைக்கும் திறன் படைத்தது. தூக்க பிரச்சனை உள்ளவர்கள் சந்தனம் மணம் கொண்ட ரூம் பிரெஸ்னஸ் ஸ்பேரேயை பயன்படுத்தலாம். இல்லையெனில் சந்தனை எண்ணையை வாங்கி அதை நுகரலாம்.
தூக்கமின்மையை விரட்ட சிறந்த ஆயுதம் யோகா ஆகவும் கருதப்படுகிறது. இதனால் நன்றாக தூக்கம் வரும் என்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நினைவாற்றல், செயல்திறன் மேம்படும். இதன் மூலம் உங்கள் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ளலாம்.
தியானம் செய்வதன் மூலம் மனதை அமைதி படுத்திக்கொள்ளலாம், சரியாத துக்கம் இல்லாத பிரச்சனையை விரட்டும். அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, தியானம் செய்ய வேண்டும். சுவாசம் நன்றாக பிரச்னையின்றி இருக்க வேண்டும், தியானத்தின் போது நேராக உட்கார்ந்திருக்க வேண்டும். இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் செறிமானம் ஆகியவற்றையும் சீராக்கும்.
மேலும் படிக்க:
சுரைக்காய் ஜூஸை அதிகமாகப் பருகினால் மரணமும் நிகழலாம்-எச்சரிக்கை!
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!
பூச்சி கடி முதல் தொழு நோய் வரை நோய் தீர்க்கும் மாமருந்தாகும்
Share your comments