1. வாழ்வும் நலமும்

Try This: இன்று தில்லி தாபா ஸ்டைலில் முட்டை வறுவல்!

Deiva Bindhiya
Deiva Bindhiya

உணவே மருந்து மருந்தே உணவு என்கிற பழமொழி பின்பற்றுபவர்கள் நாம் அல்லவா? இந்திய உணவுகளில் இல்லாத வெறுபாடுகளே இல்லை, தினமும் ஒரு பொருளை வைத்து வட நாடு தொடங்கி கிழக்கு, மேற்கு என தென்னகம் வருவதற்குள் மாதமே முடிந்துவிடும். அந்த அளவிற்கு நம் உணவு பழக்கத்தில் வெறுபாடுகள் உள்ளன. அதுவும் சின்ன வித்தியாசம் செய்தால் போதும், தில்லி, குஜராத், கொல்கத்தா என பல மாநிலங்களை சுற்றி வரலாம். அந்த வகையில், இன்று நாம் பார்க்க இருக்கும் ரேசிபி தில்லி தாபா ஸ்டைல் முட்டை வறுவல்.

தேவையான பொருட்கள்:

முட்டை 5 பாதியாக வெட்டவும்
எண்ணெய் தேவைக்கேற்ப
மிளகு தூள் தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
பெருஞ் சீரகம் 1/2 டீ ஸ்பூன்
சீரகம் 1/2 டீ ஸ்பூன்
அன்னாசி பூ/மிளகு/பட்டை/கிராம்பு/பிரிஞ்சி இலை சிறிதளவு (1/2 டீ ஸ்பூன்)
தேங்காய் துண்டுகளாக வெட்டி வைக்கவும்
கருவவேப்பிலை தேவைக்கேற்ப
சிவப்பு மிளகாய் 4
வெங்காயம் பொடியாக வெட்டிக்கொள்ளவும்
இஞ்சி/பூண்டு பேஸ்ட்
தங்காளி அரைத்து வைக்கவும்
பச்சை மிளகாய் கீரி வைக்கவும்
கொத்தமல்லி இலை சிறிதளவு

TNEB: விவசாய மின் இணைப்புக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

செய்முறை:

  • முதலில் வானலியில் எண்ணெய் விட்டு மிளகு தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, அவித்து பாதியாக வெட்டி வைத்திருக்கும் முட்டையை அதில் போட்டு பிரட்டி எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்ததாக, அதே எண்ணெயில் பெருஞ் சீரகம்/ சீரகம்/அன்னாசி பூ/மிளகு/பட்டை/கிராம்பு/பிரிஞ்சி இலை சேர்த்து வருக்கவும், பின்னர் துண்டுகளாக வெட்டி வைத்த தேங்காய், பின் காய்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் கருவவேப்பிலையை சேர்த்து வறுத்தெடுக்கவும். இதனை பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • அதன் பின்னர், வானலியில் எண்ணெய் இட்டு, பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்க்கவும், வெங்காயம் பொன்னிறத்தில் வந்த பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும், அதன் பிறகு அரைத்து வைத்த தக்காளியை சேர்க்கவும். பச்சை வாடை போகும் வரை வதக்கவும், இதன்பின்னர் அரைத்து வைத்திருக்கும் பேஸ்டை சேர்க்கவும், அதனுடன் கீரி வைத்திருக்கும் பச்சை மிளகாய் சேருங்கள், 2 நிமிடம் கழித்து தனியாக எடுத்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து பிரட்டவும், மசாலா முட்டை உடன் சேர வேண்டும். அதன் பின்னர், கொத்த மல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

மேலும் படிக்க:

July Bank Holiday 2022: எத்தனை நாட்கள் தெரியுமா?

வானிலை அறிக்கை: July 01, 2022

English Summary: Try This: Delhi Taba Style Egg Curry Today! Published on: 01 July 2022, 12:50 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.