மக்களுக்கு ஒரு இனிய செய்தி, இனி உங்கள் ஹெல்த் கார்டும் ஆதார் போன்ற எளிமையான முறையில் பெறலாம். டிஜிட்டல் ஹெல்த் மிஷனின் கீழ், ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமான சுகாதார அட்டையை (Unique Health Card) அரசு தயாரித்து வருகிறது. இது ஒரு முழுமையான டிஜிட்டல் கார்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பார்க்க இந்த கார்டு ஆதார் அட்டையைப் போலவே இருக்கும்.
ஆதார் அட்டையைப் போலவே, ஹெல்த் கார்டிலும் உங்களுக்கு ஒரு எண் வழங்கப்படும். இது சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் மக்களை தனித்தனி நபர்களாக, அவர்களது தனித்துவமனான சுகாதார நிலையுடன் அடையாளம் காண உதவும், அதற்காகவே பிரேத்யேகமாக உருவாக்கப்படுகிறது. இதன் மூலம், மருத்துவர்கள் உங்களின் முழுமையான உடல்நலப் பதிவேட்டை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
தனிப்பட்ட சுகாதார அட்டை எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் (What is the use of this card? )
இந்த பிரத்யேக அட்டை மூலம் ஒருவர் எங்கு சிகிச்சை பெற்றார், அவருக்கு என்ன பிரச்சனைகள் உள்ளது என்பது குறித்து தெரியவரும். மேலும், தனிப்பட்ட சுகாதார அட்டையில் நபரின் உடல்நிலை தொடர்பான அனைத்து தகவல்களும் பதிவாக இருக்கும். இதன் காரணமாக, நோயாளி தன் சிகிக்கைக்காக செல்லும் அனைத்து இடங்களுக்கும் தனது மெடிகல் ஃபைல்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம், இனி இருக்காது.
- ஆதார் அட்டையைப் போலவே, தனிப்பட்ட சுகாதார ஐடியின் கீழ், ஒவ்வொரு நபரின் உடல்நலம் தொடர்பான தரவுத்தளத்தை அரசு தயார் செய்யும்.
- இந்த அடையாள அட்டையுடன், அந்த நபரின் மருத்துவப் பதிவேட்டில் அனைத்து விவரங்கள் வைக்கப்படும்.
- இந்த ஐடியின் உதவியுடன், ஒரு நபரின் முழுமையான மருத்துவ பதிவைக் காண முடியும்.
- ஒருவர் ஒரு டாக்டரிடம் செல்லும்போது, அவர் தனது ஹெல்த் ஐ.டி-யைக் காட்டி சிகிச்சை பெறலாம்.
- இதற்கு முன் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, எந்தெந்த மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது, எந்தெந்த மருந்துகள் முன்பு கொடுக்கப்பட்டன என்பது குறித்தும் இதில் தெரிய வரும்.
- இந்த வசதியின் மூலம், அரசு மக்களுக்கு சிகிச்சை போன்றவற்றிலும் உதவ எளிதாக இருக்கும்.
செய்தி:
இன்றும் நாளையும் வானிலை நிலவரம், மழைக்கு வாய்ப்பு! விவரம் உள்ளே
இந்த விஷயங்கள் ஹெல்த் ஐடியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் (What are the information did the id card contains)
- இதில், முதலில் ஒரு நபரின் அடையாள அட்டை உருவாக்கப்பட்டு, அவரிடமிருந்து மொபைல் எண், ஆதார் எண் பற்றி தகவல்கள் தெரியவரும்.
- இந்த இரண்டு பதிவுகளின் உதவியுடன், ஒரு தனிப்பட்ட சுகாதார அட்டை உருவாக்கப்பட்டு தகவல்கள் பதிவிடப்படும்.
- இதற்காக, அரசு ஒரு சுகாதார ஆணையத்தை உருவாக்கும். இது தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கு.
- ஹெல்த் ஐடி (Digital Health ID Card) தயாரிக்கப்பட வேண்டிய நபரின் சுகாதார பதிவுகளை சேகரிக்க சுகாதார ஆணையத்தால் அனுமதி வழங்கப்படும், என்பது குறிப்பிடதக்கது.
- பொது மருத்துவமனை, சமூக சுகாதார மையம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் அல்லது தேசிய சுகாதார உள்கட்டமைப்பு பதிவேட்டுடன் இணைக்கப்பட்ட சுகாதார வழங்குநர் ஆகியோர் ஒரு தனிநபரின் சுகாதார ஐடியை உருவாக்க முடியும் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.
- உங்கள் சொந்த பதிவுகளை https://healthid.ndhm.gov.in/register இல் பதிவு செய்து உங்கள் ஹெல்த் ஐடியை பெறலாம்.
மேலும் படிக்க:
திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா: வரும் 7ந்தேதி முதல் துவங்கும்
Share your comments