தோல் வறட்சி, சொரி, சிரங்கு, படை, வெண்படை, கரப்பான், விரலிடுக்கில் தோன்றும் குருக்கள், முகப்பரு, உடம்பில் ஆங்காங்கே அவ்வப்போது தோன்றும் தடிப்பு போன்ற பல பிரச்சனைகள் உடலில் வருகிறது. அவ்வாறு இருக்க இந்த பிரச்சனைகளில் இருந்து எவ்வாறு வெளிவருவது என்பதைப் பார்க்கலாம்.
வெட்டி வேருக்கு மற்றொரு பெயர் விலாமிச்சை வேர் என்றும் கூறுவார்கள். வயிற்று கடுப்பு, நீர் கடுப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வெட்டிவேரை சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து பெருஞ்சீரகத்துடன் கலந்து 200 மி.கி குடித்தால் நிவாரணம் கிடைக்கும். தினமும் நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் உடல் சூடு மற்றும் தாகமும் தணியும். வயிறு சம்மந்த பட்ட நோய்கள் குணமாகும். வாந்தி பேதி போன்ற பிரச்னைகளுக்கும் நல்ல மருந்தாகும். மேலும் சளி இருமல் போன்ற தொந்தரவுகளில் இருந்து விடுவிக்கும்.
வேட்டி வேர் மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய்யை நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மற்றும் காயங்கள் மீது தடவி வந்தால் தழும்புகள் மறையும். சீகக்காய்க்கு பதில் வெட்டிவேரின் பொடியை பயன்படுத்தி வந்தால் முடிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இதை தொடர்ந்து செய்வதனால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகத்தில் பொழிவு காணப்படும். கோடை காலங்களில் உடலில் ஏற்படும் அரிப்பு வியர்வை போன்ற பிரச்சனைகளுக்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம்.தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் வெட்டிவேரை அரைத்து தடவலாம்.
வீட்டிலேயே, குளியல் பொடி தயாரிப்பது எப்படி? விவரங்கள் உள்ளே!
உடல் சோர்வு ஏற்பட்டால் வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து குடிக்கலாம். இந்த நீர் செரிமான ஆற்றலை அதிகரிக்கும். வயிற்றுப் புண் போன்ற பிரச்சனைகளும் குணமாகும். முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்கவும் வெட்டி வேர் பயன்படுத்தகிறது. வெட்டி வேர் சிறிதளவும் கொதிநீரில் ஊறவைத்து கொட்டை நீக்கிய கடுக்காயை மறுநாள் அரைத்து அதனுடைய விழுதை பருக்கள் மீது தடவினால் வடுவே தெரியாமல் மறைந்து போகும்.
மேலும் படிக்க:
Share your comments