1. வாழ்வும் நலமும்

வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புபவரா நீங்கள்: இதோ 10 யோசனைகள்!

R. Balakrishnan
R. Balakrishnan

Want to change your life

வாழ்க்கையை மாற்ற நினைப்பவர்கள், உங்கள் வாழ்க்கையில் சில நல்ல வழிகளை பின்பற்ற வேண்டியது அவசியம். டான்ஸ் ஃப்ர்ஸ்ட் என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு அறிஞர்களின் 10 கட்டளைகள், டிவிட்டர் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதன் சுருக்கமான அம்சம் இதோ.

சில டிப்ஸ் (Some Tips)

  • நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் படிக்க நேரம் ஒதுக்குங்கள். 24 மணிநேரத்தில், 4 சதவீதம் அதாவது ஒருமணி நேரம் புத்தகம் படிக்க ஒதுக்கினால், நீங்கள் பணியாற்றும் அல்லது விரும்பும் துறையில் 10 ஆண்டுகளில் உச்சத்தில் இருப்பீர்.
  • பொதுவாக பிறர் பேசும்பொழுது முழுமையாக கவனியுங்கள். பெரும்பாலோனோர் ஒருபோதும் கவனிப்பது இல்லை
  • அவசியம் ஏற்பட்டால் தவிர, தேவைக்கும் குறைவாக பேசுங்கள் : வார்த்தைகளால் பிறரை கவர நினைக்கும் போது, பொதுவாக பார்த்தோமெனில் கட்டுப்பாடு இருக்காது. எனவே நிறைய பேசுவதை விடுத்து, குறைவாக சொல்லி நிறைவாக செயலில் காட்டுங்கள்.
  • சவாலான நேரங்களில் உங்களுக்கு ஒரு புள்ளியை பார்க்க முடியாது என்பதால், அதன் பின்னணியில் ஒன்றும் இல்லை என்று அர்த்தமில்லை
  • மூன்று விதிகளை செயல்படுத்துங்கள் : நீங்கள் இருக்குமிடத்தில், உங்களிடம் இருப்பதை வைத்து, உங்களால் என்ன முடியுமோ அதை செய்யுங்கள்.
  • சக்திவாய்ந்த சொத்து : நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு சிறந்த சக்திவாய்ந்த சொத்து நம் அறிவு மட்டுமே. அதற்கு சரியான பயிற்சியளித்தால், அளவிட இயலாத சொத்துக்களை பெற முடியும்.
  • ஒருநாளைக்கு முன்னரே திட்டமிடுங்கள் ; திட்டமிடல் என்பது எதிர்காலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டு வரும் கலையாகும். எனவே நாளைக்கு செய்ய வேண்டியதை இப்போது முதல் திட்டமிட்டு செய்ய துவங்குங்கள்
  • வாழ்க்கை - வேலை சமநிலை பின்பற்றுதல்: அலுவலகம் அல்லது வேலை என்று வரும் போது, எவ்வளவு நேரத்திற்குள் தரமாக செய்து முடித்தீர்கள் என்று கணக்கிடப்படும். அதுவே வீடு என்று வரும் போது, எவ்வளவு அதிக நேரம் செலவிட்டீர்கள் என்பதை பொறுத்து மதிப்பிடப்படும். வேலை என்று வரும் போது வேலையையும், வீடு என்று வந்துவிட்டால், குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்குங்கள்
  • உங்களின் ஒரே குறிக்கோள் பணக்காரர் ஆவது தான் என்றால், நீங்கள் ஒருபோதும் அதை அடையமாட்டீர்கள்.
  • நீங்கள் முடிவு ஒன்றை எடுக்காதவரை, பதில் என்பது இல்லை என்பதாக தான் இருக்கும்.

மேலும் படிக்க

ஓவரா யோசித்து கவலை கொள்பவரா நீங்கள்: இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!

குங்குமப்பூ தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

English Summary: Want to change your life: here are 10 ideas!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.