தற்பொழுது பலரும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகிறார்கள். உடல் எடையினைக் குறைப்பதற்கு எனப் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து அதிகரித்து வருகின்ற எடையைக் குறைக்க உதவும் வழிகளில் ஒன்றை குறித்துதான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். அதிலும் குறிப்பாக ஒரு இயற்கையான வழியினைப் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.
உடல் எடையினைக் குறைக்கப் பல வழிகள் இருப்பினும், ஒரு பொருளை சாப்பிடுவதால் உடல் எடை குறையும் எனச் சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அமாம். அப்படி ஒரு எளிய ட்ப்ஸ்-ஐதான் இப்போது பார்க்கப்போகிறோம். அந்த ஒரு பொருள் என்ன என்றால் அதுதான் நம் சமையலில் பயன்படுத்தும் அதிலும் குறிப்பாக, இனிப்பு பண்டங்களில் பயன்படுத்தும் உலர் திராட்சை ஆகும்.
உலர் திராட்சை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்குப் பல வழிகளில் நன்மை அளிக்கும். இதை உண்பதால் கொழுப்பை எரிப்பதனைத் துரிதப்படுத்துவது மட்டுமல்லாது, வளர்சிதை மாற்ற விகிதத்தினை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், குடல் இயக்கத்தை விரைவுபடுத்தவும் உதவுகிறது. அதோடு, உலர் திராட்சை பல வழிகளில் கொழுப்பு இழப்புக்கு உதவி புரிகிறது.
உலர் திராட்சையை சாப்பிடுவதால் உடல் பருமன் குறையும் எனக் கூறப்படுகிறது. உலர் திராட்சை நம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், எடை அதிகரிப்பதைத் தடுக்கவும் உறுதுணையாக இருக்கின்றது. மேலும், உலர் திராட்சை வளர்சிதை மாற்ற விகிதத்தினை அதிகரிக்கின்றது. இதன் காரணமாக உணவு வேகமாகச் செரிக்கப்படுகிறது. இதன் காரணமாக வயிறு சுத்தமாகவும், அதிக எடையினை அடையாமலும் இருக்கிறது.
உடல் எடை குறைக்க எளிய வழிகள்
எடை இழப்புக்கு உலர் திராட்சையும் சாப்பிட சிறந்த வழி என்று பார்த்தால், முதலில் அவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து உண்பது எனக் கூறப்படுகிறது. இரவில் ஊறவைத்துவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் திராட்சையைச் சாப்பிடலாம். இது குடல் இயக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தினை அதிகரிக்க உதவுகிறது.
பாலுடன் சேர்த்து குடிக்கலாம்
உலர் திராட்சையுடன் பால் குடிப்பதால், உங்கள் உடலில் ஆற்றல் அதிகரிப்பதுடன் அது எடை இழப்புக்கும் உதவும். மேலும், ஹார்மோன் ஆரோக்கியத்தினைச் சரியாக வைத்து எடையை குறைக்கவும் இந்த உலர் திராட்சை உதவுகின்றது.
சாலட், ஸ்னாக்ஸ்களில் பயன்படுத்தி உண்ணலாம்
சாலடுகள் மற்றும் சிற்றுண்டிகளில் உலர் திராட்சையைச் சேர்ப்பது இனிப்புச் சுவைக்கான எண்ணத்தினைக் குறைக்க உதவும். அதிகமாக இது நார் வகையாகவும் செயல்படுவதால் எடை இழப்புக்கு இது உதவியாக இருக்கிறது.
உடலின் எடை இழப்புக்கு திராட்சையினைச் சாப்பிடுவதற்குக் காலை நேரம் சரியான நேரமாக இருக்கும். மேலும், மாலை நேர சிற்றுண்டியின் பொழுதும் திராட்சையினை உட்கொள்ளலாம். எப்படி சாப்பிட்டாலும், உலர் திராட்சை உடல் எடையினைக் குறைக்க பெரிதும் உதவும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments