அசைவ விரும்பிகள் தினசரி அவர்களது உணவில் ஏதேனும் ஒரு அசைவம் இருந்தே ஆக வேண்டும். அதிலும் அதிகமாக சிக்கனை எடுத்துக் கொள்வார்கள் சிலர். நீங்கள் தினசரி சிக்கன் விரும்பியாக இருந்தால் இந்தக் கட்டுரை உங்களுக்கானது. அசைவ உணவு உடலுக்கு நல்லது என்றாலும், தினசரி சிக்கனை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல தீர்வாக இருக்காது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
பலருக்கும் அதிகமாக சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிவதில்லை. மலிவான விலை மற்றும் சுவை காரணமாக அதிகமான வீடுகளில் இந்த சிக்கன் இடம்பெறுகிறது. ஒரு சிலர் நாட்டுக்கோழி தினசரி எடுத்துக் கொள்ளுங்கள் நல்லது என்பார்கள். கோழி உணவு உடலுக்கு நல்லது என்றாலும், அதிகமாக சாப்பிடக்கூடாது.
சிக்கன் உணவுகள்
பலரும் விரும்பி உண்ணக்கூடிய உணவுகளில் சிக்கன் முதலிடம் பெறுகிறது. சமைப்பதற்கும் எளிதானது. இவை தேர்ந்தெடுப்பதற்கு வேறு முக்கிய காரணம் இதில் அதிக புரதம் உள்ளது. மேலும் மற்ற இறைச்சிகள் உடன் ஒப்பிடுகையில் இதில் கொழுப்பு உள்ளடக்கங்கள் மிகவும் குறைவாக உள்ளன. இதுபோன்ற காரணங்களால் இதை ஏன் தினசரி சாப்பிடக் கூடாது என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால், அது பல்வேறு சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆரோக்கியமான உணவு முறையும் அவசியம். ஒரே உணவை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால், அது நன்மை பயக்காது. ஒரே உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, அது சுகாதார பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். கோழியை அதிகப்படியாக உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் எடையில் பாதிப்பு, இதயத்தில் அடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே இது போன்ற உணவுகளை தினசரி உட்கொள்வதை தவிர்க்கலாம்.
அதிகப்படியான புரதம்
கோழியை உணவில் சேர்த்துக் கொள்வதால் நமது உணவில் 10% - 35% புரதச் சத்தை எடுத்துக் கொள்கிறோம். அதிகமான புரதத்தை உணவாக உண்பதால், இது நமது உடலில் கொழுப்பினை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் உடல் எடையும் அதிகரிக்கிறது. மேலும் ரத்தத்தில் கொழுப்பின் அளவையும் உயர்த்துகிறது. தினசரி அதிக கோழி உணவுகளை உண்பது உங்கள் புரத உட்கொள்ளலில் பெரும் பங்குக்கு வழிவகுக்கும். எனவே இந்த உணவை தினசரி உண்ணும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.
இருதய நோய்கள்
கோழி மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, அதை நமது உடலில் இருதயப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் இந்த பிரச்சினைகள் மரணத்துக்குக் கூட வழி வகுக்கும். கோழி போன்ற புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என பார்த்தோம். இதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சாதாரணமாக தினசரி உணவில் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவு உண்பவர்கள் குறைந்த அளவில் BMI கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.
விஷமாகும் உணவு
கோழியை உணவில் சேர்த்துக்கொள்வது எப்போதுமே ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. நீங்கள் கோழியை சமைக்காமல் காய்கறிகளுடன் வைக்கும் போது, இந்த பச்சை கறியுடன் இருக்கும் காய்கறிகளில் பல பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இவை நமது உடலில் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் குழந்தைகள் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இருக்கும் வீட்டில் இது போன்ற சுகாதாரப் பிரச்சினைகள் வருவதை தவிர்ப்பது மிகவும் அவசியாமன ஒன்றாகும்.
ஆன்டிபயாடிக்
பிராய்லர் கோழி வளர்ப்பில் நுண்ணுயிர் எதிர்ப்புகளை கால்நடைகளுக்கு செலுத்துவது வழக்கம். இதனால் நமது உடலில் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தலாம். நாம் ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சமயத்தில் இது போன்ற கோழி உணவுகளை எடுத்துக் கொள்வது, நம் உடல் நிலையை மேலும் பாதிக்கும். நாம் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் செயல்படாமல் போகும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே அளவான உணவு என்றுமே ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். தினசரி இந்த கோழி உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து, அதற்கு மாற்றாக பயனுள்ள சில உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். நலமுடன் வாழலாம்.
மேலும் படிக்க...
தினம் ஒரு கேரட் சாப்பிட்டால் கொழுப்புச்சத்தைக் குறைக்கலாம்! ஆய்வில் தகவல்
காலையில் முருங்கை இலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள்!
Share your comments