வெள்ளை முடிக்கு வீட்டு வைத்தியம்:
இப்போதெல்லாம் உணவு மற்றும் தண்ணீரால் மக்களின் தலைமுடி வயதாவதற்கு முன்பே வெள்ளையாக மாற ஆரம்பித்துவிட்டது. மக்கள் குறிப்பாக பெண்கள் வெள்ளை முடி பிரச்சனையை சமாளிக்க பல வழிகளை பின்பற்றுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் தலைமுடி வெண்மையாக மாறுவதைத் தடுக்கும் அத்தகைய ஆயுர்வேத முறையை இன்று தெரிந்துகொள்ளுங்கள். ஷாம்பூவுடன் தடவினால் நிறைய பலன் கிடைக்கும் அப்படி ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஷாம்பூவுடன் மூலிகை நீர் பயன்படுத்தவும்
தேவையான பொருள்
- 2 தேக்கரண்டி தேயிலை இலைகள்
- 2 தேக்கரண்டி வெந்தய விதைகள்
- 2 தேக்கரண்டி நெல்லிக்காய் தூள்
மூலிகை நீரை இவ்வாறு தயார் செய்யவும்-
இதற்கு, ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை எடுத்து, அதை அடுப்பில் வைத்து சூடாக்கவும். இப்போது தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தண்ணீரில் சேர்க்கவும். இந்த தண்ணீரை பாதியாகக் குறையும் வரை குறைந்த தீயில் சமைக்கவும்.
தண்ணீர் பாதி அளவு ஆனப் பிறகு, எரிவாயுவை அணைத்து, இந்த தண்ணீரை குளிர்விக்க விடுங்கள். ஆறியதும் வடிகட்டி, கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் குப்பியில் நிரப்பி குளிர்பதன பெட்டியில் வைக்கவும்.
ஷாம்பூவுடன் எப்படி பயன்படுத்துவது
முடியைக் அலசும் போது, ஷாம்புவை நேரடியாக தலைமுடியில் தடவக் கூடாது. ஒரு பாத்திரத்தில் அரை கப் மூலிகைத் தண்ணீரைச் சேர்த்து, பின்னர் ஷாம்பூவை கலக்கவும். உங்கள் தலைமுடியை வாரத்திற்கு 2-3 முறை ஷாம்பு போட்டு அலசினால், அப்போது இந்த தண்ணீரோடு சேர்த்து பயன்படுத்துங்கள். இவ்வாறு செய்வது உங்கள் தலைமுடியை வெள்ளை நிறத்தில் இருந்து கருப்பாக மாற்றும்.
மேலும் படிக்க:
Share your comments