விருதுநகர் மாவட்டத்தில் வேளாண் பணிகளுக்குக் குறைந்த வாடகையில் வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்கள் வழங்கப்படுவதால், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விவசாயம் (Agriculture)
விருதுநகர் மாவட்டத்தில் மானாவாரி, சீணறு மற்றும் குமாத்துப் பாசன விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொறியியல் துறை முயற்சி (Department of Engineering effort)
இதில் நில உழவுப் பணியிலிருந்து அறுவடை பணிகள் வரை இயந்திரங்களைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேளாண்மை இயந்திர மயமாக்கல் பணிகளை வேளாண்மைப் பொறியியல் துறை மேற்கொண்டு வருகிறது.
இயந்திரங்கள் வாடகைக்கு (Rent machines)
விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையில் உழுவை இயந்திரம் 8 எண்களும், மண் தள்ளும் இயற்திரம் 2 எண்களும் ஜெசிபி இயந்திரம் 2 எண்களும், பொக்லைன் இயந்திரம் ஒன்றும், அரசு நிர்ணயம் செய்த குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது.
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் விவசாய இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாடகை என்ன? (What is rent?)
இதில் உழுவை இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.340/-க்கும், மண் தள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.840/-க்கும் வாடகைக்கு விடப்படும்.
இதேபோல் ஜெசிபி இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.660/-க்கும், பொக்லைன் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1440/-க்கும் (எரி பொருள் மற்றும் ஓட்டுநர் செலவு) உட்பட வழங்கப்பட்டு வருகிறது.
பிறக் கருவிகள் (Other tools)
மேலும் உழுவை இயந்திரங்களில் இணைப்புக் கருவிகளாக, சட்டிக் கலப்பை, 5 கொலுக் கலப்பை 9 கொலுக் கலப்பை, சுழல் கொத்துக் கலப்பை, சோளத்தட்டை அறுவடை கருவி, நேரடி விதை விதைக்கும் கருவி, தென்னைத் தோகைகளைத் துகள்களாக்கும் கருவி, வாய்க்கால் வெட்டும் கருவி, வைக்கோல் வாரி, வைக்கோல் கட்டும் இயந்திரம், கடலைக் கொடியிலிருந்து கடலை பிரிக்கும் கருவி என பல்வேறு புதிய புதுமையான தொழில்நுட்பக் கருமிகளும், டிராக்ட்ருடன் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ரூ.340/- என்கிற குறைந்த வாடகையில் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நிலத்தடி நீர் ஆய்வு (Groundwater exploration)
சிறுபாசனத் திட்டத்தில் ஒரு பணியிடத்திற்கு ரூ.500/-க்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே.பெர்), வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர், அலைபேசி எண் : 98426 76725யைத் தொடர்பு கொள்ளவும்.
இதேபோல், திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் வட்டார விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, கலசலிங்கம் பல்கலைக் கழகம் எதிரில், கிருஷ்ணன்கோவில், அலைபேசி எண்: 80563 17476ஐயும் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்
ஜெ.மேகநாதரெட்டி
மாவட்ட ஆட்சியர்
விருதுநகர்.
மேலும் படிக்க...
PMFBY: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
PMFBY: பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு!!
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் ஐந்து ஆண்டு கால சாதனை : ரூ. 90,000 கோடி காப்பீடு வழங்கல்!!
Share your comments