1. தோட்டக்கலை

FPOக்களுக்கான வேளாண் இயந்திரங்கள் ரூ.3.35 கோடியில் கொள்முதல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Agricultural machinery for FPOs purchased for Rs 3.35 crore!

நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்குவதற்காக வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ரூ.3.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் (FPO)

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் வேளாண் துறை மூலம் 600 உழவர் ஆர்வலர் குழுக்கள், 120 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தோட்டக்கலைத் துறை மூலம் 380 உழவர் ஆர்வலர் குழுக்கள், 72 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவுக்கும் தொகுப்பு நிதியாக தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.9.80 கோடியில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

ரூ.3.35  கோடி நிதி (Rs 3.35 crore fund)

இதன் தொடர்ச்சியாக நிகழாண்டில் 335 உழவர் ஆர்வலர் குழுக்கள், 7 உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களுக்கு தொகுப்பு நிதி ரூ.3.35 கோடியில் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கண்காட்சி (Exhibition)

இதற்கான கண்காட்சி அண்மையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ வளாகத்தில் நடைபெற்றது. இதில் உழவர் குழுவிற்கு தேவையான இயந்திரங்கள் வாங்குவது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்டறியப்பட்டன.

இக்கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள், தங்களுக்கு தேவையான கருவிகளை மானிய உதவியுடன் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலை வழங்கினர்.

மேலும் படிக்க..

ரீசார்ஜ் கார்டு மூலம் பசும்பால் வழங்கும் இயந்திரம்!

குப்பைகளை மறுசுழற்சி செய்து, இயற்கை உரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம்!

கொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! உலக சுகாதார அமைப்பு பாராட்டு

English Summary: Agricultural machinery for FPOs purchased for Rs 3.35 crore!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.