தற்பொழுது வாழைத்தாரின் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. தொடர்ந்து வீசிய காற்றின் காரணமாக மரங்கள் சாந்து சேதமடைந்ததால் வாழைத்தாரின் விலையானது இரு மடங்கு உயர்ந்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து வீசிய பலத்த காற்றின் வேகம் காரணமாக ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்ததால் வாழைத்தாரின் வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி வாழைச் சந்தையில் வாழைத்தார்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இனி வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்!!
பொதுவாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் வாழை விவசாயத்தில் பெரும்பான்மையாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிக்கத்தக்கது. எனவே, இந்த மாவட்டத்தில் சுமார் 20,000 ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டு வருகின்றது. பயிர் செய்யப்படும் வாழைத்தார்கள் விளைச்சல் கண்டதும் தூத்துக்குடி வாழைச் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: இன்றைய வேளாண் செய்திகள்: காய்கறி பயிரிட ரூ. 8 ஆயிரம்!
இத்தகைய நிலையில் கடந்த மாதம் வீசிய பலத்த காற்றின் காரணமாக ஏராளமான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன. இதன் காரணமாக தூத்துக்குடி வாழைச் சந்தைக்கு வாழைத்தார்களின் வரத்து மிகவும் குறைந்தது. வரத்துக் குறைந்துள்ளதால் தூத்துக்குடி வாழைச் சந்தையில் வாழைத்தார்கள் விலை திடீரென்று இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ. 8000 ஊக்கத்தொகை! இன்றே விண்ணப்பியுங்க!!
கடந்த மாதம் 500 ரூபாய் எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நாட்டுத்தார் தற்பொழுது 1000 ரூபாய் எனவும், 300 ரூபாய் எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த சக்கைத்தார் 1200 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுன்கிறது. இந்த விலையேற்றம் வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் எண்ணுகின்றனர்.
மேலும் படிக்க
Share your comments