அனைத்து வகை பயிர்களுக்கும், சிறந்த ஊட்டச்சத்து மருந்தாக செயல்படும், பழக்கரைலைத் தயாரிப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள் (Ingradients)
அமிலத்தன்மை அற்றப் பழங்களான
பப்பாளி - 2 கிலோ
நெல்லி - 2 கிலோ
கொய்யா - 2 கிலோ
வாழை - 2 கிலோ
பனம் - 2 கிலோ
நாட்டுமாட்டுக் கோமியம் - 1லிட்டர்
செய்முறை (Method)
-
பழங்களை சுமார் 15 லிட்டர் கொள்ளவு கொண்ட பாத்திரத்தில் போட்டு, இறுக்கமாக மூடிவிடவும். இரண்டு நாள் கழித்து கோமியத்தை ஊற்றி நன்கு கலக்கி விடவும்.
-
இந்த கலவையை தினமும் தவறாமல் கலக்கிவிடவும்.
-
30 நாட்கள் கழித்து பார்த்தால் பழக்கரைசல் தயாராகியிருக்கும்.
அளவு (Quantity)
இந்தக் கரைசலை 1:10 என்ற விகிதத்தில் தண்ணீருடன் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
இதனை ஜீவாமிர்தத்திற்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.
பயன்கள் (Benefits)
-
அவ்வாறு பயன்படுத்தும் இந்த கரைசல், பயிர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து மருந்தாக செயல்பட்டு, மகசூலை அதிகரிக்க உதவும்.
-
இது ஒரு வளர்ச்சி ஊக்கியாக செயல்பட்டு, பயிர்களில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும்
-
தழைச்சத்தை கொடுத்து, பயிர் வளர்ச்சி சீராக வைக்கும்.
-
மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்து பூக்கும் தன்மையையும் உயர்த்தும்.
-
தரமான காய்கறிகள் கிடைக்கும்
-
பயிர்களுக்கு ஒவ்வாத மனத்தை ஏற்பத்தி பூச்சிகளை விரட்டும்
-
விவசாயிக்கு செலவையும் குறைக்கும்
மேலும் படிக்க....
PMMSY : கால்நடை வளர்ப்போருக்காக e-Gopala App- அனைத்து தகவலும் உங்கள் கையில்!!
100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு- பெண்களுக்கு வாய்ப்பு!
Share your comments